சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு காரான, பென்ட்லி கார் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்களா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனத்திடம் இருந்து திருடப்பட்ட பென்ட்லி முல்சேன்  சொகுசு கார், DHA பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததும், காராச்சியில் உள்ள சுங்கத் துறை விசாரணை நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணைக்காக சென்றது,  வீட்டின் முன் கார்  நிறுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, சாம்பல் சாம்பல் நிற பென்ட்லி காரை நகர்த்துவதற்கான முயற்சியில் ஒரு சிலர் அதனை தள்ளுவதைக் காணலாம். 


கீழே உள்ள வீடியோவில் சொகுசி காரைக் காணலாம்:




திருட்டில் ஈடுபட்டவர்கள் பென்ட்லியில் உள்ள டிரேசிங் டிராக்கரை அகற்றவோ அல்லது அணைக்கவோ தவறிவிட்டனர். இது வாகனத்தின் சரியான இடத்தைக் கண்டறிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உதவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் சோதனையிட்டதில், அந்த வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பதும் தெரியவந்தது. இங்கிலாந்து அதிகாரிகள் வழங்கிய திருடப்பட்ட வாகனத்தின் விவரங்களுடன் காரின் சேஸ் எண் பொருந்தியிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.


மேலும் படிக்க | நிதிஷ்குமார் - சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்


வீட்டு உரிமையாளர் போதுமான ஆவணங்களை வழங்கத் தவறியதை அடுத்து, காரை வாங்கியவரையும், வாகனத்தை விற்ற தரகரையும்  அதிகாரிகள் கைது செய்தனர்.


சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் வாகனம் திருடப்பட்டதாகவும், கார் திருடும்  மோசடியில் ஈடுபட்டவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாட்டின் உயர்மட்ட தூதரகத்தின் ஆவணங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு காரை இறக்குமதி செய்ததாகவும் PTI தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதி - இந்தியன் அவார்ட்ஸின் முயற்சி


மேலும் படிக்க | இந்திக்கு நோ சொல்வார்கள்; இந்தி படத்தை மட்டும் விநியோகிப்பார்கள் - உதயநிதியை விமர்சிக்கும் அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ