இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக அவர மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்து உள்ள நிலையில், இது தொடரபான விசாரணைக்கு இன்று அவர் அழைக்க்ப்பட்டு இருந்தார். 


விசாரணைக்கு பிறகு நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் இன்று அவர் கைது செய்யபட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சேவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்படுகிறார்.