மலேசியா: அழகு கலை சிகிச்சை விபரீதமாக மாறியதால், மலேசியா பெண்மனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசியாவை சேர்த Siti Zalina(34), நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். அழகு கலையில் ஆர்வம் கொண்ட Siti Zalina சமீபத்தில் அழகு கலை நிலையம் ஒன்றிர்க்கு சென்று தன் முகத்தினை பொளிவு பெற செய்யுமாறு கூறியுள்ளார்.


நிலைய கலைஞர்களும் ஸ்ட்ரீமர் யுக்தியை பயன்படுத்தி Siti Zalina-க்கு சிகிக்கை அளித்துள்ளனர். சிகிச்சையின் பகுதி தருவாயில் Siti Zalina-வின் முகம் அளவுக்கு அதிகமான நீராவியால் சேதம் அடைந்துந்துள்ளது. சிதைவு காயங்களுடன் தவித்த Siti Zalina-னை அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.


தற்போது Klang மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் Siti Zalina-வின் பகுதியளவு முகம், அதாவது கண், மூக்கு, கழுத்து பகுதி தீகாய தழும்புகளால் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மலேசியாவில் செயல்பட்டு வரும் அழகுகலை நிலையங்களில் ஏறக்குறைய 2000 அழகுகலை கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் சுகாதார அமைச்சகத்தில் இருந்து அங்கீகார சான்றிதழ் பெற்ற கலைஞர்பகள் வெறும் 200 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.