கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு மோசமாவே உள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றது முதலே முகமது முய்ஸு  இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். முகமது முய்ஸு சீனாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் எனப் பார்க்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என முகமது முய்வு கேட்டிருந்தார். இந்த நிலையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், முகமது முய்ஸு முதலில் பிடிவாதமாக இருப்பதை கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுடன் பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பது குறித்து பேச வேண்டும் என அறிவுரை


மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ( Mohamed Muizzu) தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அண்டை நாடான இந்தியாவுடன் பொருளாதாரச் சவால்களைச் சமாளிப்பது குறித்து பேச வேண்டும் என மாலத்தீவு முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் கூறியிருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஸு உலகம் முழுவதும் சீனாவுக்கு ஆதரவான தலைவராக பார்க்கப்படும் நேரத்தில் முன்னாள் அதிபரான இந்த கருத்து வந்துள்ளது. இத்தனை காலம் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த மாலத்தீவு அதிபர் முய்ஸு திடீரென தற்போது மென்மையாக பேசத் தொடங்கியுள்ளார். தங்கள் நாட்டில் இந்தியா எண்ணில் அடங்காத திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளதாகவும் இந்தியா தங்களுக்கு நெருங்கிய நட்பு நாடு என்றும் தெரிவித்தார்.


கடனை திரும்ப செலுத்த இந்தியாவிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் அதிபர் 


எனினும், மாலத்தீவு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை தான் இதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் மாலத்தீவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், மாலத்தீவின் தற்போதையை பொருளாதார சூழலில் அவர்களால் இந்தளவுக்குத் தொகையைத் திருப்பி அளிக்க முடியாது. இந்தியாவிடம் கூடுதல் அவகாசம் கேட்க முயலும் நிலையில், மாலத்தீவு  அதிபர் தற்போது மென்மையாக பேசத் தொடங்கியுள்ளார். 


மேலும் படிக்க | கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்... எச்சரிக்கும் கேனரி தீவுகள் நிர்வாகம்!


அதிபர் இப்ராஹிம் சோலிஹ் வேண்டுகோள்


மாலத்தீவு தனது கடனை அடைக்க இந்தியா சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் சோலிஹ்-ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மாலத்திவில், கடந்த செப்டம்பர் 2023 இல் நடைபெற்ற  தேர்தலில், 45 வயதான முய்ஸு 62 வயதான சோலிஹ்யை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவிடம் மிகப் பெரிய தொகையைக் கடனாக பெற்றுள்ள மாலத்தீவு


எனினும், மாலத்தீவு இந்தியாவிடம் வாங்கிய கடன் என்பது மிக மிகக் குறைவு. உண்மையில் சீனாவிடம் தான் மிகப் பெரிய தொகையைக் கடனாக பெற்றுள்ளது. அங்கே கடந்த 2018 வரை 5 ஆண்டுகள் அதிபராக இருந்த அதிபர் அப்துல்லா யாமீனும், முய்ஸுவை போலவே சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் அதிபராக இருந்த போது சீனாவிடம் கடன்களை வாங்கி குவித்தார். மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களுக்காகச் சீனாவிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கியதே இப்போது மாலத்தீவுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாலத்தீவுக்கு மொத்தம் 3 பில்லியின் டாலர் அதாவது சுமார் ரூ.2500 கோடி வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. அதில் 42% சீனாவிடம் இருந்து பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ