பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதல் தம்பதிகள்... நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை!
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார்.
உலகில் நடக்கும் சில விஷயங்கள் உண்மையில், நம்மை தூங்க விடாமல் செய்து விடும். பொதுவாக மனதை உலுக்கும் பல கொலை சம்பவங்களை நாம் கேள்விப்படுவோம். ஆனால் சில கொலைகள் நம்மை உலுக்கி விடும். பகை காரணமாக பல கொலைகள் நடப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், உயிரைக் காக்கும் தந்தையே குழந்தைகளை கொலை செய்யும் போது அதை என்னவென்று சொல்வது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தனர். இந்த மகா பாதக செயலை செய்த இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த கொடூரமான சம்பவம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நடந்தது. ஜாங் (Zhang) மற்றும் யே (Ye) என்ற பெயர் கொண்ட காதல் தம்பதிகள், குழந்தைகளைக் கொல்ல சதி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இந்த கொலையை திட்டமிட்டு சதி செய்து நிறைவேற்றியுள்ளனர் என்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மனதால் நினைத்து பார்க்கவே முடியாத இந்த கொடூர சம்பவம் நாடு தழுவிய அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. ஜாங் போ மற்றும் அவரது காதலி யே செங்சென் ஆகியோருக்கு கடுமையான தண்டனை விதிக்குமாறு கோரி பல தரப்பில் இருந்து குரல்கள் எழுந்தன. 2020 ஆம் ஆண்டில் ஜாங் தனது இரண்டு குழந்தைகளை அடுக்கு மாடி குடியிருப்பின்,15 வது மாடியில் இருந்து குழந்தைகளை வெளியே தூக்கி எறிந்ததற்காக தண்டிக்கப்பட்டார். அதே நேரத்தில், காதலி யே (Ye) தனது காதலனை குழந்தைகளைக் கொல்லும்படி கட்டாயப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டார்.
மனதை பதற வைக்கும் இந்த மகாபாதக செயலை செய்த இவர்கள், சமூக ஊடகம் மூலம் அறிமுகமாகி சந்தித்த நிலையில், அந்த உறவு காதல் உறவாக மலர்ந்தது. இதில் சாங் என்ற அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆகியவர். அவர் தனது மனைவி சென் மெலின் (Chen Meilin) என்பவரை 2020 பிப்ரவரியில் விவாகரத்து செய்திருந்தார். இரண்டு குழந்தைகள் உடையவர். அவருக்கு இரண்டு வயதுடைய மகளும், ஒரு வயது மகனும் இருந்தனர். தனது காதலி இவர்கள் இருவரையும் தடையாக கருதியதால், குழந்தைகளை கொல்ல ஜோடி முடிவு செய்தனர். இதை விபத்து போல் காட்டி கொலை செய்ய முடிவு செய்தனர்.
இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தம்பதியினர் மேல்முறையீடு செய்ததன் காரணமாக, தூக்கு தண்டனை இந்த வாரம் தான் நிறைவேற்றப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கு விசாரணைகள் முடிவடைந்து உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்த பின்பு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சீனாவின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜான் மற்றும் ஏ ஆகிய இருவரும், திட்டமிட்டு சதி செய்து பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த நிலையில் இந்த உச்சபட்ச தண்டனைக்கு இவர்கள் முற்றிலும் தகுதியானவர்கள் என்று கூறி தீர்ப்பளித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ