அமெரிக்காவின் அயோவாவின் டெஸ் மொயின்ஸ் நகரில் உள்ள வங்கியைக் கொள்ளையடித்த புளோரிடாவைச் சேர்ந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், பின்னர் அவரை தனது இல ஓட்டிச் சென்ற உபெர் டிரைவரை கார்ஜாக் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புளோரிடாவைச் சேர்ந்த 22 வயதான ஜேவியர் ரஃபேல் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில், மினசோட்டாவின் லேக் கவுண்டியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க-கனடா எல்லையில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் இருந்தபோது அவரை ​போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர்.


அவர் அந்த வங்கியை கொள்ளையடிக்க ஊபர் காரை புக்கிங் செய்துள்ளார். ஊபர் மூலம் வங்கிச்சென்று கொள்ளையடித்துவிட்டு வந்த பின்னர், அதே ஊபர் கார் ஓட்டுநரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி, ஜேவியர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.  


மேலும் படிக்க | மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்... ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!


அவர் முதலில் ஊபரை முன்பதிவு செய்ததுதான், அவரைக் கண்டுபிடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "எங்களால் வங்கியில் சில தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. பின்னர் ஊபர் ஓட்டுநரிடம் இருந்து பெற்ற சில தகவல்களைக் கொண்டு அந்த சந்தேகிக்கப்படும் நபர் யார் என்பதை மிக விரைவாகக் கண்டுபிடிக்க முடிந்தது" என்று டெஸ் மொயின்ஸ் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


"எங்களிடம் சில தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. பின்னர் சில நல்ல புலனாய்வு திறன்வாய்ந்த அதிகாரிகளும் உள்ளன. மேலும் அவர் அமெரிக்க - கனடிய எல்லைக்கு செல்கிறார் என்பதை அந்த தொழில்நுட்பத்தை வைத்துதான் தீர்மானிக்க முடிந்தது," என்று அந்த அதிகாரி விளக்கம் அளித்தார். 


போலீசார் விசாரணையை தொடங்கும் வரை அந்த வங்கியில் கொள்ளை நடந்துள்ளது என்பதை தனக்கு தெரியாது என்று பாதிக்கப்பட்ட ஊபர் ஓட்டுநர் கூறினார். ஜேவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எவ்வளவு தொகையை கொள்ளையடித்தார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.


மேலும் படிக்க | 'நானும் ரவுடிதான்' பேஸ்புகில் கமெண்ட்... வாண்டடாக வம்பிழுத்தவரை கொக்கிப்போட்டு போலீஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ