அமெரிக்காவில் போலி மரண சான்றிதழ் மூலம் தண்டனையில் இருந்து தப்ப நினைத்த குற்றவாளி ஒருவர், எழுத்துப்பிழையினால் சிக்கிக் கொண்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூ ஜெர்சி சுகாதார துறை, பெர்ஜரின் இறப்புச் சான்றிதழ் போலியானது என்பதை உறுதிப்படுத்தியதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.


லாங் தீவைச் சேர்ந்த ஒரு குற்றவாளி  சிறை தண்டனையை தவிர்க்க,  போலி மரண சான்றிதழை அனுப்பினார். ஆனால் அவரது வழக்கறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் எழுத்துப் பிழை இருந்ததால் பிடிபட்டார்.


நியூயார்க்கின் (New York) ஹண்டிங்டனில் (Huntington) பகுதியை  ராபர்ட் பெர்கர், தண்டனையைத் தவிர்ப்பதற்காக போலி மரண சான்றிதழ் தயாரித்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால்,  கூடுதலாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஏற்கனவே திருட்டு வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ALSO READ | அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!


திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக 25 வயதான பெர்கர் கடந்த அக்டோபரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பெர்கர்  வேறு இடத்திற்கு தப்பு சென்றதோடு, அவரது வருங்கால மனைவி மூலம், அவர் இறந்து விட்டதாக ஒரு போலியான மரண சான்றிதழை அனுப்பினார் என வழக்கறிஞர்கள் கூறினர்.


போலி மரண சான்றிதழை சமர்ப்பித்த பெர்கரின் வழக்கறிஞர், அவருக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், அவர் தன்னை பகடை காயாக பயன்படுத்தியாதாகவும் கூறியுள்ளார். பெர்கருக்கு எதிரான இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்த சான்றிதழை பார்க்கும் போது, இது, நியூ ஜெர்சி சுகாதாரம், முக்கிய புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவேடு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தின் பிரதி என்று தெரிகிறது. ஆனால் ஆவணத்தில் இருந்த ஒரு எழுத்து பிழை சந்தேகத்தை எழுப்பியது.  எழுத்துரு வகை மற்றும் அளவிலும் முரண்பாடுகள் உள்ளன என்று வழக்கறிஞர்கள் மேலும் கூறினர்.


நியூ ஜெர்சி சுகாதார, முக்கிய புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவேடு துறை  பெர்கரின் இறப்புச் சான்றிதழ் போலியானது என்பதை உறுதிப்படுத்தியது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.


ALSO READ | வாழ்விலும் சாவிலும் ஹீரோவான இளைஞர்... மூளை சாவு அடைந்ததால் உடல் உறுப்பு தானம்..!!!


பெர்கர் உயிருடன் இருக்கிறார், அவர் சட்ட அமலாக்கத்திற்கு தவறான அடையாளத்தை வழங்கினார் என்றும் ஒரு கத்தோலிக்க கல்லூரியில் இருந்து திருடினார் என்ற குற்றச்சாட்டுகள்  காரணமாக பிலடெல்பியாவின் புறநகரில் கைது செய்யப்பட்டார்.