ஆப்பிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர்; ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மார்பர்க் வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் எபோலா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன என கூறப்படுகிறது. இதில் நோயாளிக்கு காய்ச்சல், நெஞ்சு வலி ஆகியவை காணப்படுகிறது. தொற்று தீவிரமடையும் போது, நிலைமை மோசமடைந்து, ​​நோயாளி இறக்கு நிலை ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்பர்க் வைரஸால் இவ்வளவு பெரிய அளவில் தொற்று பரவல் இருப்பது இதுவே முதல்முறை என்று WHO அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.


மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார துறையில் உள்ள அவசர கால நிபுணர்கள், தொற்று தடுப்பு குழுக்கள், ஆய்வகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆதரவு அமைப்புகளை பணியில் ஈடுபடுத்தி பரவலைத் தடுக்க WHO நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் மார்பர்க் வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய முடியும்.


மேலும் படிக்க | பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!


WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும், அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை செல்லலாம் என எச்சரிக்கிறார். மார்பர்க் வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், நோயாளிக்கு அதிக காய்ச்சல், தலைவலி  ஆகியவை இருக்கும். நோய்த்தொற்று ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் பல நோயாளிகளுக்கு ரத்தக்கசிவு அறிகுறிகளும் ஏற்படலாம்.


இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை சிகிச்சையோ தடுப்பூசியோ கிடைக்கவில்லை, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்.


மேலும் படிக்க | Turkey earthquake: 90 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் குழந்தை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ