ஜப்பானில் உள்ள ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முறை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, கேட்பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் அனிமேஷன் பெண்களை மணப்பதற்கு ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஒன்றை தயாரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஆண்கள் தங்களுக்கு விருப்பமான அனிமேஷன் பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திருமணத்திற்கு அரசு சான்றிதழும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 


இத்திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு அதிகபடியான சலுகைகளையும் வழங்குகிறது. இத்திருமண தம்பதிகள் 6-மாதம் பிரச்சனையின்றி வாழ்ந்தால் மாதம் சுமார் ரூ.5000 உதவித்தொகையும் வழங்குகின்றனர். 


இந்த அனிமேஷன்  பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மனதளவில் எந்தவிதமான குழப்பமும் இன்றி அலுவலகத்தில் வேலை செய்வதாகவும், விடுமுறை எடுப்பதை தடுப்பதாகவும் ஜப்பான் ஆய்வு சித்தத்தில் தெரியவந்தது.