விவாகரத்தை `சுதந்திரம்` என கொண்டாடும் மவுரித்தேனியா பெண்கள்!
விவாகரத்து கொண்டாட்டம்: பல நூற்றாண்டுகளாக, பெண்கள் பரஸ்பரம் விவாகரத்து விருந்துகளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, பாடி மற்றும் நடனமாடி கொண்டாடுகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்கா: மேற்கு ஆப்பிரிக்க நாடான மவுரித்தேனியா (Mauritania) ஏழை நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனால் அத்தகைய பாரம்பரியம் இந்த நாட்டை மிகவும் 'தனிப்பட்ட நாடாக' ஆக்குகிறது. இந்த நாட்டில், 'விவாகரத்து' ஒரு சோகமான அல்லது வெட்கக்கேடான நிகழ்வாகக் கருதப்படுவதில்லை. மாறாக விவாகரத்து ஒரு பெண்ணின் சுதந்திரமாகப் பார்க்கப்படுகிறது, பெண்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையின்படி, பல நூற்றாண்டுகளாக, பெண்கள் பரஸ்பரம் விவாகரத்து விருந்துகளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு ஆடி பாடி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இப்போது பாரம்பரிய உணவு மற்றும் கேக்குகள், செல்ஃபிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் மூலம் புதுமையும் பழமையும் இணைந்தபடி கொண்டாடுகிறார்கள்
பலமுறை விவாகரத்து செய்வது சகஜம்
மவுரித்தேனியாவில் கிட்டத்தட்ட 100 சதவீத மக்கள் முஸ்லிம்கள். இந்த பாலைவன நாட்டில் பலமுறை விவாகரத்து செய்வது சகஜம். பலர் ஐந்து முதல் 10 திருமணங்களைச் செய்கிறார்கள், சிலர் 20 திருமணங்களை கூட எட்டுகிறார்கள். விவாகரத்து ஒப்பந்தங்கள் பெரும்பாலும் வாய்மொழியாக, எழுதப்படாததால், மவுரித்தேனியாவின் புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மை குறைவாக இருந்தாலும், உலகில் விவாகரத்து விகிதங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக நாடு இருப்பதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். பல பெண்கள் விவாகரத்தை தங்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான வாய்ப்பாக பார்க்கிறார்கள். திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்தின் போது, குறிப்பாக முதல் திருமணத்தை அவர்கள் நினைத்ததில்லை.
பாரம்பரிய முறைப்படி திருமணம்
மவுரித்தேனியாவில் விவாகரத்து குறித்த இந்த வகையான பார்வை மிகவும் நவீனமாகத் தோன்றலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. பெரும்பாலான திருமண சடங்குகள் முற்றிலும் பாரம்பரியமானவை என்பதால், பெண்களுக்கு தங்கள் முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க மிகக் குறைவான விருப்பங்களே உள்ளன. உதாரணமாக, பெற்றோரே பெண்களுக்கு மணமகனைத் தேர்வு செய்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது வழக்கம். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பெண் குழந்தைகள் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மேலும் படிக்க | ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்
விவாகரத்துக்குப் பிறகு எந்தவொரு குழந்தையையும் பாதுகாப்பதில் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்புக்கு பணம் செலுத்துவதற்கு சட்டப்பூர்வமாக பொறுப்பானாலும், பெண்கள் தான் பெரும்பாலும் நிதிச் சுமையை சுமக்கிறார்கள். சூழ்நிலையை பொறுத்து திருமணம் மட்டுமல்ல, விவாகரத்தும் கூட கொண்டாட்டம் ஆகி விடுகிறது.
சமீபத்தில், முள்ளும் மலரும் எனும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்த சீரியல் நடிகை ஷாலினி தனது விவாகரத்தை கொண்டாடியது பெரிதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
திருமண வாழ்க்கை மிகவும் வேதனையும் அடி உதைகளும் நிறைந்ததாக இருந்த நிலையில், கஷ்டத்தை விட்டு விலகியதை சந்தோஷமாக கொண்டாடுகிறேன் என அவர் கூறியிருந்தார். இதிலிருந்து அவர் எவ்வளவு வலியும் வேதனையும் வாழ்க்கையில் அனுபவித்து இருக்க கூடும் என்பதை புரிந்து கொள்ளலாம். பல பெண்கள் இதே நிலையில் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தபடி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இனி வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று இது உணர்த்துவதற்காக என்றும் சீரியல் நடிகை ஷாலினி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆள் கடத்தல் பாலியல் சீண்டல் செய்த 70 வயது NRI! 20 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ