மெக்சிகோவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 58!!
தெற்கு மெக்ஸிக்கோவியின் கரையோர பகுதிகளில் வியாழன் (செப்டம்பர் 8) அன்று பிற்பாதியில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.0 என இது பதிவானது.
மெக்ஸிகோ நகரத்தின் மைய பகுதியல் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் இருந்து மக்கள் தப்பி ஓட நகர்புற கட்டிடங்களை நோக்கி விரைந்தனர். 90 விநாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் சார்ந்த பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
மெக்சிகோவில் 1985-ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கமாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மெக்சிகோ பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது குறிபிடத்தக்கது.