மெக்சிக்கோவில் 7.1 ரிக்டர் அளவு பூகம்பம்; 140 பலி
மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் தீவிரமாக நொருங்கி இடிந்து விழுந்தது. 27 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 119 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்வலாக கொடுக்கப்பட்டது.
தற்போதைய தகவலின் படி மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.
இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர், மெக்சிக்கோவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் தெரிவித்ததாவது: மெக்சிக்கோவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.