பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் விளையாட்டில் எந்த அளவுக்கு பெயர் பெற்றவரோ அதே போல சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். அடிதடி, போதைப்பொருள், பொது இடங்களில் வன்முறை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மைக் டைசன், தற்போது விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பயணியை சரமாரியாகத் தாக்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஃப்ளோரிடா பயணித்த விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த மைக் டைசனுக்குப் பின்னாள் அமர்ந்திருந்த ரசிகர் அவரிடம் தொடர்ந்து பேச முயற்சித்ததோடு, செல்ஃபி எடுக்கவும் முயன்றுள்ளார். பொறுமையாக அமர்ந்திருந்த மைக் டைசன் ஒரு கட்டத்தில் கோபமடைந்து அந்த நபரின் முகத்தில் சரமாரியாகக் குத்தினார். இதில் அந்த பயணியின் முகத்தில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. 


மேலும் படிக்க | "அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என் கட்சிக்காரர்?" உனத்கட் ரசிகரின் கேள்வியால் ஷாக்கான நெட்டிசன்கள்


அந்த பயணி மைக் டைசனின் மீது தண்ணீர் பாட்டிலை வீசியதாக டைசனது தரப்பு தெரிவித்துள்ளது. மைக் டைசனை அந்த பயணி தொடர்ந்து அழைப்பதும், இதனைத் தொடர்ந்து டைசன் அவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


 



55 வயதான மைக் டைசன் 58 போட்டிகளில் விளையாடி அதில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த 50 வெற்றிகளில் 44 வெற்றிகள் எதிராளியை நாக் அவுட் செய்து கிடைத்ததாகும். மேலும், தெலுங்கு மற்றும் இந்தியில் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் லிகர் படத்தில் மைக் டைசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | இந்திய திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR