அமெரிக்காவில் தலைவெட்டப்பட்ட சேவல் ஒன்று, முண்டமாக 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த சேவலின் பெயர் மைக் என்பதால் ’மிராக்கிள் மைக்’ என்ற அழைக்கப்படுகிறது. இந்த சேவலின் நினைவாக, அமெரிக்காவில் ஆண்டுதோறும் ’ஹெட்லெஸ் சிக்கன்’ திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை!


இந்த செய்தி உங்களுக்கு வியப்பாக தோன்றலாம். ஆனால், உண்மை, அதிசயம். தலையில்லாமல் எப்படி வாழ முடியும்? என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அப்படியான ஒரு அதிசய சேவல் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலராடோ பகுதியில் ப்ரூட்டா என்ற இடத்தில் லாய்ட் ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதியினர் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இறைச்சி வியாபாரமும் செய்து கொண்டிருந்த அவர்கள், ஒரு நாளில் 40 முதல் 50 கோழிகளின் தலையை முதலில் வெட்டியுள்ளனர்.



அப்போது, அனைத்துக் கோழிகளும் இறந்துவிட, ஒரே ஒரு கோழி மட்டும் உயிருடன் இருந்துள்ளது. அந்த சேவலும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என எண்ணியவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் கோழி இறக்கவில்லை. உயிருடன் இருந்துள்ளது. பெட்டியில் இருந்து எடுத்து சேவலை வெளியே விட்டபோது தத்தித் த்ததி நடக்கவும் செய்துள்ளது. இதனை அவர்களால் நம்ப முடியவில்லை. பின்னர், அந்த சேவலுக்கு மைக் எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.


ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதி வளர்த்த தலையில்லாத சேவல் குறித்த செய்தி அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. பேராசிரியர்கள் முதல் கண்காட்சி அமைப்பாளர்கள் வரை என அவர்களின் புகழ் பரவியது. ஹோப் வேட் என்பவர் அந்த சேவலைப் பார்த்து ‘மிராக்கிள் மைக்’ என பெயர் சூட்டினார். யூடா பல்கலைக்கழகத்திற்கு சோதனைக்காக அந்த சேவல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலை வெட்டியபிறகு சேவல் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.  அவர்களுக்கும் வியப்பாக இருந்தது. அதேநேரத்தில் சேவல் உயிருடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்தபிறகு கண்காட்சி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிராக்கிள் மைக் கலந்து கொண்டது. இதனால், ஓல்சென்னுக்கும், கிளாராவுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் ஆதாயம் கிடைத்தது. 



மிராக்கிள் மைக்கிற்கு தினமும் திரவ வடிவில் உணவு செலுத்தப்பட்டன. சொட்டு மருந்துகள் போல் உணவுக்குழாய்க்குள் நேரடியாக உணவு கொடுக்கப்பட்டது. தொண்டையில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்சு மூலம் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அரிஜோனாவின் ஃப்ரின்க்ஸில் மிராக்கிள் மைக் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எதிர்பாரதவிதமாக இறந்து விட்டது. உணவுக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டபோது சிரிஞ்சு வைத்து அந்த அடைப்பை எடுக்க ஓல்சென் முயன்றுள்ளார். அவரின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்காததால் மிராக்கிள் மைக் இறந்து விட்டது. இருப்பினும், தலையில்லாமல் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த சேவல் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இன்றளவும் இருக்கிறது.


தலையில்லாமல் சேவல் இருந்தது குறித்து ஆய்வாளர் ஒருவர் பேசும்போது, சேவல் மற்றும் கோழியின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள சிறிய பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மிராக்கிள் மைக்கின் தலை வெட்டுப்படும்போது, அலகு உள்ளிட்டவை வெட்டப்பட்டு, 80 விழுக்காடு மூளை உள்ளிட்ட உறுப்புகள் செயலிலேயே இருந்ததால் உயிர் வாழ முடிந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.


ALSO READ 'பச்சைக் கண்களை' கொண்ட ஆப்கன் பெண் மீண்டும் வைரல்- ஏன் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR