திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை!

தந்தையிடம் வரதட்சணையாக பெண்கள் தங்கும் விடுதி கட்டி தர சொல்லி கோரிக்கை வைத்த மகள்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 08:20 PM IST
திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை! title=

ராஜஸ்தான் :வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கும் பணம், பொருள், நகை போன்றவையாகும்.  ஆரம்ப காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு பரிசளிக்கும் விதமாக சில பொருட்களை கொடுக்க தொடங்கினர்.  இந்த செயல்முறையே நாளடைவில் வரதட்சணை கொடுக்கும் கலாச்சாரமாக மாறிவிட்டது.

ALSO READ நாயின் கைவண்ணத்தில் பூசணிக்காய் கேக்..வைரலாகும் வீடியோ!

இந்த வரதட்சணை பலரது வாழ்க்கையையும் சீரழிக்கும் அளவிற்கு பெருகிவிட்டது என்பதே நிதர்சனம்.  வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தங்களது உயிரை மாய்த்து கொள்ளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஆனால் சிலரின் வரதட்சணையோ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

அதாவது வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்குவது, புத்தகங்கள் வாங்குவது போன்று வித்தியாசமாக சில நிகழ்வுகள் நடந்துள்ளன.  அந்த  ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தந்தையிடம் வித்தியாசமான ஒன்றை தனது திருமணத்திற்கு வரதட்சணையாக கேட்டிருக்கிறார்.  அவரது தந்தையும் எவ்வித நிராகரிப்புமின்றி மகளின் கோரிக்கையை அப்படியே நிறைவேற்றி திருமண பரிசாக கொடுத்துள்ளார்.

rajasthan

ராஜஸ்தானின் பார்மெர் பகுதியில் வசித்து வருபவர் கிஷோர் சிங்க் கனோட் என்பவரது மகள் அஞ்சலி கன்வர்.  இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரவீன் சிங்க் என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இவரின் திருமணத்திற்கு வரதட்சணை கொடுப்பதற்காக அவரது தந்தை பணம் வைத்திருந்தார்.  இந்நிலையில் அவரது மகள் அஞ்சலி தனக்கு வரதட்சணையாக பணமோ, நகையோ, பொருளோ வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு பெண்கள் தங்கும் விடுதி ஒன்றை கட்டி தாருங்கள் என்று அவரது தந்தையிடம் கோரிக்கையை வைத்தார்.

இதனையடுத்து, தனது மகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கிஷோர் சிங்க், ரூ.75 லட்சம் பொருட்செலவில் பெண்களுக்கான தங்கும் விடுதி ஒன்றினை கட்டி அதனை தன் மகளுக்கு திருமண பரிசாக கொடுத்துள்ளார்.  பெண்களின் கல்விக்கு உதவும் வகையில் இதனை அஞ்சலி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் தந்தை மற்றும் மகளின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ Noida airport: சீன விமான நிலையம் இந்தியாவிலா? அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News