மியான்மரில் ( Myanmar) உள்ள பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடக்கு மியான்மரில் உள்ள ஒரு பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,. மேலும் பலர்  இறந்திருக்கலாம்  என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டனர்..


கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்க கல் நிறைந்த ஹபகாந்த் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் மாணிக்க கற்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, சேறு ஒரு அலை போல வந்து மோதியது என தெரிவித்தனர். அப்பகுதியில் ஏற்பட்ட பலத்த  மழையைத் தொடர்ந்து, இந்த நிலச்சரிவி ஏற்பட்டதாக தீயணைப்பு சேவைத் துறை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.


100 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, தகவல் அமைச்சின் உள்ளூர் அதிகாரி தார் லின் மவுங் ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
 சேற்றில் புதைந்துள்ள மற்ற உடல்களை மீட்க வேண்டும் என்றும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டார். 


Hpakant பகுதியில், நெறிமுறைகளை பின்பற்றாத சுரங்கங்களில், மோசமான நிலச்சரிவுகள் மற்றும் பிற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,. பெரிய சுரங்க நிறுவனங்கள் தவற விட்ட மாணிக்க கற்களை சேகரிக்க பலர் அங்கு வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.


ALSO READ | சீனா தொடர்பாக Zee News நடத்தும் மிக பெரிய கருத்துக் கணிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு..!!!


விபத்தை நேரில் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதான சுரங்கத் தொழிலாளி மவுங் கைங், சேறுகள் அலை போல் வருவதை கண்டதாகவும்,, அவர் அதை படம் எடுக்க முயன்ற போது  மக்கள் 'ஓடு, ஓடு!' கூச்சலிட்டதாகவும் கூறினார். 


"ஒரு நிமிடத்திற்குள்,  அங்கிருந்த  மக்கள் அனைவரும் மண்ணிற்குள்  புதைந்துவிட்டார்கள் " என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில் தெரிவித்தார். சேற்றில் சிக்கிக் கொண்டவர்கள் உதவிக்காக கூச்சலிட்டனர் என்றும், ஆனால், தன்னால், ஒன்றும் செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது மனம் வெறுமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 


ALSO READ | ஆக்ரா சிறைச்சாலையில் கைதிகளுக்கான பேனிக் அலாரம் முறை. கைதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது!!


நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி அரசு 2016 இல் ஆட்சியைப் பிடித்தபோது தொழில்துறையில் உள்ள முறைகேடுகளை அகற்றப்படும் என உறுதியளித்தது,. ஆனால் பெரிய அளவில் மாற்றம் ஏதும் வரவில்லை என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


2016-17ல், மியான்மரில் பச்சை மாணிக்க கற்களின் அதிகாரப்பூர்வ விற்பனை  671 மில்லியன் யூரோ (750.04 மில்லியன் டாலர்) மதிப்புடையது என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.


ஆனால் இந்த துறை, சீனா ஏற்றுமதியை அதிகம் சார்ந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.