ஆக்ரா சிறைச்சாலையில் கைதிகளுக்கான பேனிக் அலாரம் முறை. கைதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது!!

இந்த அலாரத்தால் கைதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் வயர்லெஸ் அலாரம் அமைப்பு ஆக்ரா மாவட்ட சிறையில் நிறுவப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 2, 2020, 03:49 PM IST
  • சிறைச்சாலைக்குள் வயர்லெஸ் பேனிக் அலாரம் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு பாராகிலும் ஒரு அலாரம் சுவிட்ச் இருக்கும்.
  • இதை அழுத்தினால், அலாரமின் ஒலி, பிதான வாயிலில் கேட்கப்படும்.
ஆக்ரா சிறைச்சாலையில் கைதிகளுக்கான பேனிக் அலாரம் முறை. கைதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது!!

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் (UP) முதன்முறையாக, சிறைச்சாலைக்குள் வயர்லெஸ் பேனிக் அலாரம் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஏதாவது ஆபத்து அல்லது அவசர காலத்தில், கைதிகள் தங்கள் சிறைகளுக்குள்ளிருந்து அலாரம் அடித்து மற்றவர்களை எச்சரிக்க முடியும். இந்த அலாரம் சிறை காவலர்களை நேரடியாக சென்றடையும். இந்த அலாரத்தால் கைதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் வயர்லெஸ் அலாரம் அமைப்பு ஆக்ரா (Agra) மாவட்ட சிறையில் நிறுவப்பட்டுள்ளது.

ALSO READ: இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம்! 300 புள்ளிகள் ஏறிய Sensex!!

பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டுமே இந்த வயர்லெஸ் பேனிக் அலாரம் மூலம் கைதிகளுக்கு கிடைக்கப்பெறும். ஆக்ராவின் மாவட்ட சிறை, இவ்வகையான அலாரம் (Panic Alarm) நிறுவப்படும் உத்திர பிரதேசத்தின் முதல் சிறைச்சாலை ஆகும். இந்த புதிய தொழில்நுட்பம் மாவட்ட சிறைச்சாலையில் (Jail) பொருத்தப்பட்ட பின்னர், மாவட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பு பலமடைந்துள்ளது. இந்த அமைப்பு ரேடியோ அதிர்வெண்ணில் செயல்படும் என்று டி.ஐ.ஜி சிறை ஆக்ரா லவ் குமார் கூறினார்.

இதை ஹேக் செய்ய முடியாது, ஜாமரும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. பெரும்பாலும் இரவில் பாராக்குகள் மூடப்பட்டிருக்கும். முன்னர், கைதிகளின் உடல்நிலை மோசமடையும் நிலையில், வயர்லெஸ் மூலம் செய்தி அனுப்பப்பட்டு, அதன் பிறகு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். இதில் அதிக நேரம் கழிந்துவிடும்.

ALSO READ: 805 கோடி ரூபாய் மோசடி! சிபிஐ வலையில் சிக்கிய ஜிவிகெ குழுமம்!!

இந்த புதிய அமைப்பில், ஒவ்வொரு பாராக்கிலும், ஒரு பேனிக் பட்டன் நிறுவப்பட்டு அதன் இணைப்பு  கட்டுப்பாட்டு அறை வாயிலுக்கு அருகில் இருக்கும். கைதிக்கு உடல்நலப் பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவர்கள் அலாரத்தை அடிக்கலாம். ஒவ்வொரு பாராகிலும் ஒரு அலாரம் சுவிட்ச் இருக்கும். இதை அழுத்தினால், அலாரமின் ஒலி, பிதான வாயிலில் கேட்கப்படும். அங்குள்ள காவலர் வயர்லெஸ் மூலம் பணியில் இருக்கும் காவலருக்குத் விவரம் தெரிவிப்பார். பிறகு பிரச்சினையின் விவரங்கள்  கண்டறியப்படும். இந்த முறையில் நேர விரயம் பெரிதும் குறைகிறது. 

More Stories

Trending News