பணத்திற்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று உங்களிடம் கேட்டால்? பெரும்பாலானவர்களின் பதில் 'என்ன வேண்டுமானாலும்’ என்பதாகவே இருக்கும். ஆனால் இரசாயன மழையில் வாழ வேண்டும்,, பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் வாழ வேண்டும், நச்சு வாயுக்கள் ஆகியவற்றுடன் 45 'நாட்கள்' இருட்டில் இருக்கச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், அளை விடு சாமி என்று சொல்லும் மனிதர்களே அதிகமாக இருப்பார்கள். பெரும்பாலான மக்கள் குறைந்த பணத்தில் தரமான இடத்தில் வாழ்வதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.


ஆனால் மோசமான நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தும் நகரம் உள்ளது. ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரம் உலகின் 'மோஸ்ட் டிப்ரசிங் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!


நோரில்ஸ்க் ரஷ்யாவின் வடக்கே உள்ள நகரம். இது ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சைபீரியாவின் கிராஸ்நோயார்ஸ்க் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஒரு சாலை கூட செல்ல முடியாத அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக உள்ளது.


ஒரே ஒரு சரக்கு ரயில் மட்டுமே நகரத்திற்குச் சென்று திரும்பும். இந்த நகரமும் விமானம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் மிகச் சிலரே இந்த நகரத்திற்குச் செல்லும் அளவு தைரியம் படைத்தவர்கள் என்றே சொல்லலாம். 


யாரும் அந்த ஊரில் வாழ விரும்பாத அளவு கடுமையான நிலைமைகள் இருந்தபோதிலும், நகரத்தில் சுமார் 170,000 மக்கள் வசிக்கின்றனர். Norilsk இல் உள்ள பெரும்பாலான மக்களின் சராசரி மாத வருமானம் US$986 ஆகும். இது ரஷ்யர்களின் சராசரி மாத வருமானத்தை விட (US$739) அதிகமாகும்.


மேலும் படிக்க | கனடாவில் தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்! தலைப்பாகையைக் கிழித்து அத்துமீறல்!


இந்த நகரம் பூமியில் நிக்கல்-தாமிரம்-பல்லாடியத்தின் மிகப்பெரிய சுரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம் நகரத்தி வ்சிப்பவர்களுக்கு வேலைக்கோ அல்லது பணத்திற்கோ இடமில்லை.  நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், நோரில்ஸ்க் நிக்கலில் வேலை செய்கிறார்கள்.


மாசுபாட்டின் காரணமாக, நோரில்ஸ்கில் ஓடும் டல்டிகன் நதியின் நிறம் அடர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. ஆற்றில் ஓடும் நீரின் நிறம் முன்பு விசித்திரமாக இருந்தது. படிப்படியாக அது அடர் சிவப்பு நிறமாக மாறியது. அருகே உள்ள பெரிய தொழிற்சாலைகளால், ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறியது தெரிய வந்தது.


நிக்கல் ஆலையில் இருந்து 20 லட்சம் டன்னுக்கும் அதிகமான நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. இதனால் ரசாயன மழை பெய்கிறது, நீர்நிலைகள் மாசுபடுகின்றன. இது குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நோரில்ஸ்கில் ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகள், தேசிய சராசரி 69 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தகக்து.


மேலும் படிக்க | உலகின் மிக ‘உயரமான’ ATM எங்கிருக்கிறது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ