மாரடைப்பு இவர்களுக்கு வராது..! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!

ஆரோக்கியமான தூக்கம் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைவு

 

1 /5

அண்மைக்காலமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றாமல் இருப்பது.

2 /5

போதிய தூக்கமின்மை, முறையான நேரத்தில் டையட் எடுத்துக் கொள்ளாதது, ஆரோக்கியமான உணவுகளை புறக்கணித்து, எண்ணெய் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை எல்லாம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் அறிகுறிகள்.

3 /5

நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் முறையாக அன்றாட வாழ்க்கையில் கடைபிடியுங்கள். சரியான நேரத்துக்கு தூங்கி எழுந்து, உடற்பயிற்சி செய்து, சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். 

4 /5

அண்மையில் வெளியான ஆய்வு முறை போதிய தூக்கமில்லாதவர்களுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் அதிக மாரடைப்பு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

5 /5

அதனால் இளைஞர்கள் முதல் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.