Video: இந்தோனேஷியாவின் சினாபுங் எரிமலை வெடித்து பரவிய சாம்பலால் இருள் சூழ்ந்தது..!!!
இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் என்னும் எரிமலை வெடித்து அதில் இருந்து சாம்பல் புகை 5 கி.மீ. தூரத்திற்கு வானில் பரவியது.
இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் என்னும் எரிமலை வெடித்து அதில் இருந்து சாம்பல் புகை 5 கி.மீ. தூரத்திற்கு வானில் பரவியது.
இந்தோனேசிய எரிமலை மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது. திங்களன்று சாம்பல், வான் பரப்பில் 5 கிமீ (3.1 மைல்) தூரத்திற்கு பரவியது. பெரும் இடி ஓசையுடன் எரிமலை வெடித்த பிறகு அதன் சாம்பல் புகையாக பரவியதால் அந்த இடம் இருண்டு விட்டதாக என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
சுமத்ரா தீவில் சினாபுங் எரிமலை, ஒரு வருடத்திற்கும் மேலாக செயலற்ற நிலையில் தான் இருந்து வருகிறது. இதற்உ முன்னதாக சனிக்கிழமை அன்று இதே போல், சாபம் புகையாக பரவியது. முன்னதாக லாவா அதாவது எரிமலை குழம்புகள் வரலாம் என அதிகாரிகள் அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தனர்.
வடக்கு சுமத்ராவின் கரோவில் உள்ள 2,460 மீட்டர் (8,071 அடி) உயரமான மலையின் உச்சியில் இருந்து வெடித்து பரவும் காட்சிகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வியத்தகு காட்சிகளில் அடர்த்தியான சாம்பல் ஒரு பெரிய மேகத்தை போல பரவுவதை காணலாம்,
"ஒலி இடி போல் கேட்டது, இது 30 வினாடிகளுக்கு குறைவாக நீடித்தது" என்று அங்கு குடியிருக்கும் ஃபக்ரூர் ரோஸி பாசி தொலைபேசி மூலம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
எரிமலையின் 3 கி.மீ சுற்றளவில் யாரும் வர வேண்டாம் எனவும், எரிமலை சாம்பல் மேலே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகளைக் தவிர்க்க முகமூடிகளை அணியவும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எரிமலை நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ |
இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இப்பகுதியில் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகக் கூறினார்.
"சினாபுங் மலையைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்போது மிகவும் இருட்டாக உள்ளது" என்று சம்பவத்தை எர்ரில் பார்த்த கில்பர்ட் செம்பிரிங் கூறினார். சினாபுங் வெடித்தபோது அவர், அங்கிருக்கும் தனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
"இது இரண்டு நாட்களுக்கு முன்பு வெடித்ததை விட மிக பெரிய அளவில் வெடித்துள்ளது" என அவர் மேலும் கூறினார்.
ALSO READ | புத்தர் குறித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் சர்ச்சை எதுவும் இல்லை: இந்தியா
உலகின் மிக எரிமலை உள்ள நாடுகளில் ஒன்றான சினாபுங், 2010 ஆம் ஆண்டில் முன்பு வெடித்தது. அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.