ஜூபா: கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஆப்பிரிக்காவில் ஒரு மர்மமான நோய் பரவி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்கு சூடானின் ஜோங்லே மாகாணத்தில் உள்ள வடக்கு நகரமான பங்காக்கில் இந்த நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி உலக சுகாதார அமைப்பின் (WHO) கவலையை அதிகரித்துள்ளது. இப்போது WHO பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.


வெள்ளத்தால் ஏற்கனவே நிலைமை மோசமாக உள்ளது


இந்த நோயின் ஆபத்தைக் கண்டறிந்து விசாரிக்க விரைவுக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார். இந்த குழு மக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். 


தற்போது கிடைத்துள்ள புள்ளிவிவரத்தின்படி இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 89 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதித்த பகுதி, சமீபத்திய கடும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியை அடையும் சாலைகளும் சேதமடைந்துள்ளதால், விஞ்ஞானிகள் குழு ஹெலிகாப்டர் மூலம் அங்கு உள்ளே செல்ல நேரிட்டதாக அவர் கூறினார்.


ALSO READ | அதிகரிக்கும் Omicron பீதி: இறப்பு எண்ணிக்கை குறித்து கவலையில் WHO 


ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள்


சூடானின் நிலம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சர் லாம் துங்வார் குய்க்வாங்கின் கூற்றுப்படி, ஜொங்கிலி மாநிலத்தின் எல்லையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மலேரியா போன்ற நோய்களின் பரவலைத் தூண்டியது. உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். 
இங்குள்ள தண்ணீரில் எண்ணெய் கலந்துள்ளதாகவும், இதனால் வளர்ப்பு பிராணிகளும் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தெற்கு சூடானின் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதி மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்


சூடான் நாட்டில் சுமார் 60 ஆண்டுகளில் மிகக் கடுமையான வெள்ளமாக கருதப்படும் இந்த வெள்ளத்தால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு UNHC கூறியுள்ளது. 


இந்தப் பகுதியில் பணிபுரியும் சர்வதேச அமைப்பான Médecins Sans Frontires (MSF), வெள்ளத்தால் ஏற்பட்ட குழப்பம் தற்போது சுகாதார வசதிகள் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவின் (Coronavirus) புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இந்த '5' அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR