Omicron Symptoms: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரானின் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) இது குறித்து பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. கொரோனாவின் இந்த மாறுபாட்டின் தொற்று விகிதம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பல்வேறு சுகாதார அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. ஒமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை, இது நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் தொற்று தொடர்பான இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் இருப்பது அவசியம். ஓமிக்ரான் அறிகுறிகளின் இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்:
தொண்டை அரிப்பு - தென்னாப்பிரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி இது குறித்து கூறுகையில், ஒமிக்ரான தொற்று பாதிப்பு, ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை புண்க்கு பதிலாக தொண்டை அரிப்பு போன்ற பிரச்சனையைப் எதிர் கொண்டுள்ளதாக கூறினார். இந்த இரண்டு தொண்ட பிரச்சனைகளும் ஒரு அளவிற்கு ஒத்ததாக இருந்தாலும், தொண்டை அரிப்பு பிரச்சனை இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.
ALSO READ | பகீர் சம்பவம்! ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி!
சோர்வு - முந்தைய தொற்று மாறுபாடு வகைகளைப் போலவே, ஓமிக்ரான் சோர்வு அல்லது தீவிர சோர்வை ஏற்படுத்தலாம். சோர்வு மற்ற காரணங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம் என்றாலும், ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், இதனை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரி ஆலோசனையை பெற மறக்காதீர்கள்.
மிதமான காய்ச்சல் - கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து லேசானது முதல் மிதமான காய்ச்சல் என்பது COVID-19 தொற்று அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் ஓமிக்ரானில் காய்ச்சல் லேசான காயச்சலாக இருக்கும் என்றாலும் பல நாட்கள் நீடிக்கும்.
வறட்டு இருமல் - ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வறட்டு இருமல் இருக்கலாம் என தென்னாப்பிரிக்கா சுகாதாரத் துறை கூறியுள்ளது. உங்கள் தொண்டை வறண்டு போகும் போது அல்லது தொற்று காரணமாக தொண்டையில் ஏதாவது சிக்கியிருப்பதை போல் உணரும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது.
இரவில் வியர்த்தல் - இரவில் வியர்ப்பதும் ஒமிக்ரான் தொற்று நோயின் அறிகுறிகளாகும் என தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத் துறையின் டாக்டர் அன்பன் பிள்ளை கூறுகிறார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏசி அறையில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் தூங்கினாலும் அவருக்கு அதிக அளவில் வியர்வை ஏற்படுகிறது என்கின்றனர்.
ALSO READ | Omicron அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR