நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் என எச்சரிக்கும் நாசா! அதிர்ச்சிகரமான ஆய்வு
கடல் மட்டம் உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் நீருக்குள் மூழ்கும் என நாசா எச்சரிதுள்ளது. நியூயார்க் மற்றும் பால்டிமோர் நகரங்கள் கடலில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என நாசா தெரிவித்திருப்பது திகைப்பை மேலும் கூட்டியுள்ளது. வர்ஜீனியா டெக்கின் புவி கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகம் நாசா நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. இது உலகளவில் ஏற்படும் கடல்சார் ஆபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த குழு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வறிக்கையின்படி, கடற்கரையில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நம்பியுள்ள உள்கட்டமைப்பு, விளைநிலங்கள் மற்றும் ஈரநிலங்களை அச்சுறுத்தும் அளவுக்கு புவியல் பிரச்சனை வேகமாக நடக்கிறது என்று கூறியுள்ளது.
கடற்கரைகளின் இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் குழு, செயற்கைக்கோள் தரவு மற்றும் ஜிபிஎஸ் சென்சார்களை ஆய்வு செய்தனர். நோர்போக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் வர்ஜீனியா போன்ற முக்கிய நகரங்களில் உள்கட்டமைப்பு 2007 மற்றும் 2020-க்கு இடையில் கணிசமாக மூழ்கியதை கண்டுபிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர் வரை நிலம் மூழ்கியுள்ளது. மேரிலாந்து, டெலாவேர், தென் கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் உள்ள சில மாவட்டங்களும் இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகத்தில் நிலம் மூழ்குவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சதுப்பு நிலங்களில் உள்ள நிலம் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மூழ்குகிறது. காடுகளும் உப்பு நீர் ஊடுருவல் மற்றும் வடிகால் நிலம் ஆகியவற்றால் இடம்பெயர்ந்துள்ளன என தெரிவித்துள்ளனர். இருப்பினும், வனவிலங்குகள் மட்டும் பாதிக்கப்படவில்லை என்ற தகவலை உறுதிபடுத்திய விஞ்ஞானிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 8,97,000 கட்டமைப்புகள் கடல் நீரால் சூழப்படும் அபாயம் கொண்ட நிலத்தில் உள்ளன என தெரிவித்துள்ளனர்
வர்ஜீனியா டெக் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்புகள் PNAS Nexus-ல் வெளியிடப்பட்டன. மத்திய அட்லாண்டிக் பகுதி மேலும் மூழ்கும்: நாசா படங்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்கைக்கோள்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி நாசாவால் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. படங்களில், 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பின்வாங்கத் தொடங்கிய லாரன்டைட் பனிக்கட்டியால் ஏற்பட்ட பாதிப்பால் மத்திய-அட்லாண்டிக் பகுதி மேலும் மூழ்கி அப்பகுதியை கீழே மூழ்கடித்தது என கண்டறிந்துள்ளனர்.
வர்ஜீனியா டெக் லியோனார்ட் ஓஹென்ஹென் என்ற விஞ்ஞானி இது குறித்து பேசும்போது, "இந்த ஆராய்ச்சியில், நிலம் சரிவு எவ்வாறு சமூகங்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பாதிப்பை கடலோர அபாயங்களுக்கு அதிகரிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்காக செயற்கைக்கோள் ரேடார் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்.
எங்கள் முக்கிய கண்டுபிடிப்புகள், 1.2 முதல் 14 மில்லியன் மக்களின் 2,000 முதல் 74,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு வரை ஆண்டுக்கு 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மூழ்கி வருவதை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று கூறினார். மேலும், இந்த மூழ்கும் நிலம் பல முக்கிய நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பை பாதிக்கிறது, இதனால் வெள்ளம் மற்றும் பிற கடலோர ஆபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானி ஒஹென்ஹென் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ