Bangladesh: 14 நாட்களுக்கான நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது அரசு
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.
வெள்ளிக்கிழமை முதல் 14 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு போடப்படும் என வங்கதேச அரசு வியாழக்கிழமை (ஜூலை 22) அறிவித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை தொடரும்.
ஊரடங்கு (Lockdown) அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.
அரசாங்க உத்தரவின்படி, காவல்துறை, வங்கதேச எல்லைக் காவலர் படை (BGD) மற்றும் இராணுவம், ஊரடங்கு கண்டிப்புடனும் முறையாகவும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சாலைகளில் கடுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்.
ALSO READ: UAE: வெப்பத்தை சமாளிக்க துபாயில் போலி மழை! Fake Rain என்றால் என்ன?
புதன்கிழமை வங்கதேசத்தில் (Bangladesh) 7,614 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 173 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனுடன் அங்கு இதுவரை கொரோனா தொற்றால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,36,503 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 18,498 ஆகவும் உயர்ந்துள்ளது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) தெரிவித்துள்ளது.
புதன்கிழமை கொரோனா தொற்றிலிருந்து (Coronavirus) குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,704 ஆக இருந்தது. இதனுடன் இதுவரை இந்த தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 961,044 ஆக உள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, வங்கதேசத்தில் இப்போது COVID-19 இறப்பு விகிதம் 1.63 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 84.56 சதவீதமாகவும் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செயல்முறை மற்றும் பலவித தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்துகொண்டிருக்கின்றது. எனினும், பல வித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
ALSO READ: இந்த நகரத்தில் குடிபுகுந்தால் இலவச வீடு, வேலை எல்லாம் கிடைக்கும்: நீங்க ரெடியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR