சுவா: கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பயம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஜி (Fiji) அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) அறிவித்துள்ளார்.
'No Jabs, No Job' அதாவது தடுப்பூசி (Vaccine) செலுத்திக்கொள்ளவில்லை என்றால், வேலைகள் இல்லை என்ற புதிய தகவலை அளித்த அவர், கொரோனாவைத் தவிர்ப்பதற்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்றும், அதை மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். டெல்டா மாறுபாடு உலகின் பல நாடுகளின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்டா மாறுபாடு அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஒரு பெரிய தலைவலியாகிவிட்டது.
ஊழியர்களுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பிஜியின் (Fiji) பிரதமர் பிராங்க் பைனிமராமா, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சார்பாக, தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டப்பட வேண்டு என்றும், இல்லையெனில் கடுமையான அபராதங்களுக்கு தயாராக இருக்குமாறும் நிறுவனங்களுக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களுக்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Delta Variant: வரும் வாரங்களில் தீவிரம் அதிகரிக்கும் - எச்சரிக்கும் WHO
நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எந்தெந்த நிறுவனங்களில் இன்னும் பெரும்பாலான ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லையோ அந்த நிறுவனங்களை மூடுவதாகவும் ஃபிஜி அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நாட்டு மக்களுடன் உரையாற்றிய ஃபிஜி பிரதமர், ”தடுப்பூசி போடவில்லை என்றால், வேலை இல்லை!! கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் என்று அறிவியல் நமக்கு கூறியுள்ளது. இப்போது இதன் அடிப்படையில் அரசாங்கம் ஒரு கொள்கையைத் தயாரிக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வேலையை இழக்க தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
அரசாங்கத்தின் இந்த போக்குக்கு என்ன காரணம்
பிஜியில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. பலமுறை எச்சரிக்கைகள் வந்துள்ள நிலையிலும், மக்கள் எதையும் கேட்கத் தயாராக இல்லை.
இவற்றை மனதில் வைத்து, இப்போது அரசாங்கம் மிகவும் கண்டிப்பாகிவிட்டது. ஏப்ரல் வரை, பிஜியில் சுமார் ஒரு வருடமாக எந்த சமூக தொற்றும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தனிமைப்படுத்தப்படும் விதிகள் மீறப்பட்டதன் காரணமாக, நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
டெல்டா மாறுபாட்டின் (Delta Variant) பல வழக்குகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் சுமார் 700 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
ALSO READ: ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ் படுகொலை தொடர்பாக 4 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR