இந்த நகரத்தில் குடிபுகுந்தால் இலவச வீடு, வேலை எல்லாம் கிடைக்கும்: நீங்க ரெடியா?

ஒரு ஸ்பானிஷ் நகரம் வேலைவாய்ப்புடன் இலவச வீட்டு வசதியையும் வழங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, இங்கு மக்களை குடிபுக வைக்க உள்ளூர் நிர்வாகம் ஒரு தனித்துவமான திட்டத்தை உருவாக்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 22, 2021, 03:59 PM IST
  • ஒரு ஸ்பானிஷ் நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
  • இங்கு மக்களை குடிபுக வைக்க உள்ளூர் நிர்வாகம் ஒரு தனித்துவமான திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • இதேபோன்ற ஒரு திட்டத்தை இத்தாலியின் சிசிலியன் டவுன் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வந்தது.
இந்த நகரத்தில் குடிபுகுந்தால் இலவச வீடு, வேலை எல்லாம் கிடைக்கும்: நீங்க ரெடியா? title=

மாட்ரிட்: ஒரு ஸ்பானிஷ் நகரம் வேலைவாய்ப்புடன் இலவச வீட்டு வசதியையும் வழங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, இங்கு மக்களை குடிபுக வைக்க உள்ளூர் நிர்வாகம் ஒரு தனித்துவமான திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் படி, இங்கு வந்து தங்குபவர்களுக்கு வேலைகள், இலவச தங்குமிடங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்த இதுவரை ஏராளமான மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களை கவர்ந்திழுக்க இந்த முயற்சி

தலைநகர் மாட்ரிட்டின் கிழக்கே அமைந்துள்ள கிரிகோஸின் Paladar de Aragón நகரத்தின் நிர்வாகம் குறைந்து வரும் மக்கள் தொகை குறித்து கவலை கொண்டுள்ளது என்று மிரரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இங்கு 138 பேர் மட்டுமே வாழ்கின்றனர். ஒரு காலத்தில், இந்த நகரமும் மற்ற நகரங்களைப் போலவே சலசலப்புடன் இருந்தது.

ஆனால் படிப்படியாக மக்கள் இங்கிருந்து பெரிய நகரங்களுக்குச் செல்லத் தொடங்கினர். இப்போது நிர்வாகம் மீண்டும் இந்த நகரம் முன்பு போலவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. எனவே மக்களை ஊக்குவிக்க பல வித திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

குடும்பங்களுக்கு மட்டுமே நன்மை கிடைக்கும்

இதன் பின்னர் மிகக் குறைந்த விலையில் வீடு வாடகைக்கு கிடைக்கும். மேலும், இந்த சலுகையின் பயன் குழந்தைகள் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்களும் உள்ளூர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயாராக இருக்க வேண்டும்.

இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்தால் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Paladar de Aragón -ல் வசிப்பவர்களுக்கு வேலைக்கான இலவச ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இலவச ஏற்பாடு நீண்ட காலத்திற்கு அளிக்கப்படாது. முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இது அளிக்கப்படும்.

இதன் பின்னர் மிகக் குறைந்த விலையில் வீடு வாடகைக்கு கிடைக்கும். மேலும், இந்த சலுகையின் பயன் குழந்தைகள் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்களும் உள்ளூர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயாராக இருக்க வேண்டும்.

ALSO READ: சவுதி அரேபியாவில் மாற்றத்திற்கான விதை; மெக்காவில் பெண் பாதுகாவலர்

உள்ளூர் பள்ளியில் 9 குழந்தைகள் மட்டுமே உள்ளனர்

இந்த நகரத்தின் உள்ளூர் பள்ளியில் தற்போது 9 குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். துணை மேயர் எர்னஸ்டோ அகஸ்டி, எதிர்காலத்தில் பள்ளியை மூடும் நிலை வராமல் இருக்க, பள்ளியில் இன்னும் அதிக குழந்தைகள் சேர வேண்டும் என்று கருதுகிறார்.

ஸ்பெயினிலிருந்து விண்ணப்பங்கள் வரும் என்றுதான் தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால், லத்தீன் அமெரிக்கா, குரோஷியா மற்றும் ருமேனியா ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் இங்கு குடியேற விண்ணப்பிதிருக்கிறார்கள் என்றும் எர்னஸ்டோ கூறியுள்ளார்.

இத்தகைய சலுகை இத்தாலியிலும் வழங்கப்பட்டது

இதுவரை சுமார் 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாக துணை மேயர் தெரிவித்தார். நகரத்தின் விடுதிகளை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், விண்ணப்பத்தின் படி மக்களுக்கு இடம் அளிப்பதில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

இதேபோன்ற ஒரு திட்டத்தை இத்தாலியின் சிசிலியன் டவுன் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ், காலியாக இருந்த 900 வீடுகள் தலா வெறும் ஒரு யூரோவிற்கு வழங்கப்பட்டன.

ALSO READ:  பகீர் தகவல்! கொரோனா உலகின் பல லட்சம் குழந்தைகளை அனாதைகள் ஆக்கியுள்ளது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News