Nepal Plane Accident: அண்டை நாடா நேபாளத்தின் தலைநகரான காத்மண்டு நகரின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான விமான விபத்து இன்று நடந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த விமானத்தில் பணியாளர்கள், ஏர் ஹோஸ்டர்ஸ் உள்பட மொத்தம் 19 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து போக்ரா நகருக்குச் செல்லக்கூடிய அந்த சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 11 மணியளவில் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து டேக் ஆப் ஆகும் சமயத்தில் விபத்தை சந்தித்தது. வானில் பறப்பதற்கு தயாராகி வந்தபோது, விமான ஓடுபாதையிலேயே சறுக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



மருத்துவமனையில் விமானி


விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்திருப்பதால் அதில் பெரும்பாலானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில், தற்போது அதில் இருந்த 19 பேரில், 18 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அந்த விமானம் 50 பேர் மட்டும் பயணிக்கக் கூடிய சிறிய ரக விமானம் என்று கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Nepal Plane Crash (2023): 2006இல் கணவர், 2023இல் மனைவி - விமான விபத்துகளில் பலியான விமானி ஜோடிகள்



விமான விபத்து நடந்த இடமே பயங்கர புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள் நொறுங்கிய விமானத்தில் இருந்து உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சாக்கியா என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரின் உடல்நிலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகிவில்லை. 


மிக ஆபத்தான ஏர்போர்ட் 


நேபாளத்தில் இதுபோன்று விமான விபத்து நடப்பது புதிதில்லை எனலாம். அந்நாட்டின் விமானத் துறை, வான் பாதுகாப்பில் உலகின் மோசமான தரத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விபத்து நடந்த காத்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் அனைத்து பக்கங்களிலும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டு, பீடபூமியின் உச்சியில் அமைந்திருக்கிறது. உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக இந்த காத்மண்டூ திரிபுவன் சர்வதேச விமான நிலையம் பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, 1992ஆம் ஆண்டு காத்மாண்டு விமான நிலையத்திற்கு அருகே பாகிஸ்தான் இன்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 167 பேர் உயிரிழந்தனர். இதுதான் அந்நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்தாகும். கடந்தாண்டும் இதுபோல் பயங்கர விமான விபத்து ஒன்று நடந்தது. எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்தாண்டு பொக்ரா நகரில் விபத்தில் சிக்கியதில் மொத்தம் ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்தனர். 


மேலும் படிக்க | வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள் - என்ன பிரச்னை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ