நேபாள நிலம் ஒன்றுக்கு உயிர் உள்ளது என்றால், முதல்முறை கேட்கும் நபருக்கு கேலியாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மைதான். இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு என்று அழைக்கப்படும் நேபாளத்தின் டெக்டோனிக் தட்டு தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த மில்லியன் ஆண்டுகளில் நேபாளத்தின் நிலப்பரப்பு 1500 கி.மீ அளவிற்கு நகர்ந்து செல்லும் என நம்பப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2015ம் ஆண்டு ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாட்டின் டெக்டோனிக் பிளேட்டின் சுழற்சியே காரணம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர். நேபாளத்தின் பல மலைக்கிராமங்களும் நகரங்களும் அழிந்தன. இதுமட்டுமின்றி, எவரெஸ்ட் சிகரத்தில் நிலச்சரிவு சம்பவங்களும் நடந்தன. 1934 ஆம் ஆண்டு 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு எற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாகக் இது கருதப்பட்டது. பல இடங்களில் நிலம் உயர்ந்து பல இடங்களில் நீரில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சுமார் 6 மீட்டர் நகர்ந்தன எம்ன நாசா கூறியுள்ளது.


மேலும் படிக்க | விண்வெளியில் காந்தப்புயல்; SpaceX அனுப்பிய 40 செயற்கோள்கள் சேதம்..!!


டெக்டோனிக் தட்டுகள் என்றால் என்ன


பூமியின் மேல் மேற்பரப்பு, பூமியின் தட்டு என்றும் அழைக்கப்படுகிறது, இது வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை டெக்டோனிக் தட்டுகள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்தியத் தட்டு யூரேசியத் தட்டு நோக்கி நகர்ந்ததால் இமயமலை உருவானது என்று நம்பப்படுகிறது. இந்திய தட்டு பல மில்லியன் ஆண்டுகளாக யூரேசிய தட்டு நோக்கி நகர்ந்து தொடர்ந்து அழுத்தத்தை அதிகரித்து வருகிறது, அதே அழுத்தத்தின் விளைவாக, இமயமலை மலைகள் பிறந்தன. தற்போது கூட, இந்திய தட்டு தொடர்ந்து வடக்கு திசையில் திபெத்தை நோக்கி, அதாவது யூரேசிய தட்டை நோக்கி நகர்கிறது. பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய தட்டு திபெத்திய தட்டின் மேலும் 20 மில்லி மீட்டர் நகர்கிறது.


இந்தியத் தட்டு முன்னோக்கி நகரும்போது, ​​திபெத்தின் தெற்குப் பகுதி அதன் அதிகபட்ச அழுத்தத்தைத் தாங்குகிறது. திபெத்திய பீடபூமி இமயமலையின் வடக்கே அமைந்துள்ளது, இது வடக்கு-தெற்கில் 1000 கிமீ நீளமும், கிழக்கு-மேற்கில் 2500 கிமீ அகலமும் கொண்டது. இந்திய தட்டுகளின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக, இந்த பகுதி அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இது பெரும்பாலும் பூகம்பத்தின் வடிவத்தில் வெளிவருகிறது.


நேபாளம் இந்திய-ஆஸ்திரேலிய புவித்தட்டில் அமைந்துள்ளது. இந்த இந்திய-ஆஸ்திரேலிய தட்டு ஒரு பெரிய நிலத் தட்டு ஆகும், இதன் கிழக்கு பகுதி ஆஸ்திரேலிய தட்டு என்றும் மேற்கு பகுதி இந்திய தட்டு என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய புவித்தட்டு 5.6 செமீ (2.2 அங்குலம்) வேகத்தில் நகர்கிறது, அதே சமயம் இந்திய தட்டு யூரேசிய தட்டு நோக்கி 2.0 செமீ வேகத்தில் நகர்கிறது. இந்த இரண்டு பகுதிகளின் இயக்கவியல் காரணமாக, நேபாளத்தின் மேலோட்டமும் நகர்கிறது.


மேலும் படிக்க | சீன விமான நிலையம் இந்தியாவிலா? அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR