Nepal பிரதமர் ஓலியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது
நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல் புயலாய் சுழன்றடித்து தற்போது ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.
நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல் புயலாய் சுழன்றடித்து தற்போது ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.
முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு 2020 டிசம்பர் 20-ம் தேதி பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரை செய்திருந்தார்.
ஓலியின் கோரிக்கையின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அதிபரின் உத்தரவை ரத்து செய்தது.
Also Read | மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50000 கோடி
இதன் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு முன்னதாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 10-ம் தேதி நம்பிக்கை வாக்கு கோரப் போவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து நேபாளத்தின் ஓலி அரசு பெரும்பான்மை ஆதரவை இழக்கிறது.
இதுதொடர்பான கடிதத்தை ஒப்படைத்த பின்னர் மாவோயிஸ்ட் கட்சியின் குருங் செய்தியாளர்களை சந்தித்தார். அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளதாலும், அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும், ஆளும் கட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!
தற்போது ஆதரவு வாபஸ் பெறுவதாக வெளிப்படையாக மாவோயிஸ்ட் அறிவித்ததால் பிரதமர் ஓலியின் ஆட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஆளும் சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு மொத்தம் 121 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாவோயிஸ்ட் கட்சிக்கு 49 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.
Also Read | Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?
நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 83-ன் படி நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்.
நேபாள அரசியலமைப்பு சாசனத்தின் 76-வது பிரிவில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவது பர்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அவையின் பெரும்பான்மையை பெறாத பிரதமர், ஒரு மாத காலத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.
இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க கோரலாம். அதோடு, ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதற்கான தேதியையும் அறிவிக்கலாம்.
Also Read | தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR