நெவாடா: வெள்ளிக்கிழமை அதிகாலை டோனோபா (Tonopah) அருகே 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது என்று யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, 65 ஆண்டுகளுக்கு பிறகு, இது வலுவான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோனோபாவுக்கு (Tonopah) அருகிலுள்ள, அதே பகுதியில் 5.4 அளவுள்ள மேலும் இரண்டு முறை பூகம்பம் (Earthquake) அந்தப் பகுதியைத் தாக்கியது.


லாஸ் வேகாஸுக்கு வடக்கே சுமார் மூன்று மணி நேரம் பயணம் தொலைவில் அமைந்துள்ள டோனோபா என்ற சிறிய நகரத்தில் ஏற்பட்ட சேதம் அல்லது காயங்கள் பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


மேலும் படிக்க: ஒவ்வொரு உறவையும் உடைக்க முடியும்.. சீனாவை அச்சுறுத்தும் டிரம்ப்


பூகம்பம் காரணமாக் நெவாடா நெடுஞ்சாலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தசாலை மூடப்பட்டுள்ளது. அது சீரமைத்த பிறகு, மீண்டும் சாலைகள் திறக்கப்படும், அதற்காக மீட்பு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் பூகம்பத்தால் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. முதலில் 6.4 ஆக இருந்து, பின்னர் 6.5 என அதன் தாக்கம் இருந்தது எனக் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்த்தும் பேரிடர் அறிவிப்புகள்: MKS அட்டாக்


​​1954 டிசம்பர் மாதத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நெவாடாவைத் தாக்கியது. இதுதான் அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் என்று நெவாடா நில அதிர்வு ஆய்வகத்தினர் கூறினார். அதன்பிறகு தற்போது அதிக அளவிலான (Magnitude 6.5) ரிக்டர் பதிவாகியுள்ளது.