இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்ரமசிங்கே: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு 2023 மிகவும் 'முக்கியமான ஆண்டாக' இருக்கும் என்றும், தனது அரசாங்கம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட காலமாக பிரச்சனைகளில் தத்தளிக்கும் இலங்கை


நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பற்றாக்குறையினால் 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியில் சிக்கியது. இதன் காரணமாக நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த மிகவும் சக்தி வாய்ந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சியை இழக்க நேரிட்டது. தற்போது விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு மிகவும் கடினமான கால கட்டம்; பெரும் சிரமங்கள், நிச்சயமற்ற நிலைகள் மற்றும் ஏமாற்றங்களை கடந்து, 2023 ஆம் ஆண்டு புதிய ஆண்டிற்குள் நுழைகிறோம் எனக் கூறினார்.


பொதுமக்களின் வலி எனக்கு புரிகிறது: ரணில் விக்கிரமசிங்க


ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில் , 'நம் அனைவரின் மீதும் விழுந்துள்ள பெரும் சுமையையும், நாட்டின் பரிதாபகரமான பொருளாதார வீழ்ச்சியால் நம்மில் பெரும்பாலோர் தாங்க வேண்டிய அதிர்ச்சிகளையும் துன்பங்களையும் நான் புரிந்துகொள்கிறேன்.


ஏப்ரல் முதல் ஜூலை வரை இலங்கையில் மிக கடுமையான சூழல் நிலவியது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏந்தியவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் படிக்க | நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


திவால் நிலையில் இலங்கை


50 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை திவால் நிலையின் விளிம்பில் இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. அதிபர் விக்கிரமசிங்க, 'உண்மையில், 2023 பொருளாதாரத்தை மாற்றுவதற்கு நாம் திட்டமிடும் ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். 2023 பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டாகும். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று பிரிட்டன் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதன் நினைவாக இலங்கையில் தேசிய தினம் அல்லது சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!


மேலும் படிக்க | நலிவடைந்த நிலையில் மண் பாண்ட தொழிலாளர்கள்! அரசிடம் வைத்துள்ள கோரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ