சென்னை: சென்னையில் 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெறவிருக்கிறது. 60 நாடுகளிலிருந்து 1500ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டிற்கு இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதற்கு நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் என உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்த அவர், இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
செனையில் ஒன்பதாம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு தொடர்பாக பேசிய உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே எண்ணத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் பாதிக்க கூடாது என்பதற்காக உதவிகளை செய்து வருகின்றார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ
அதன் அடிப்படையில் இரு நாட்டு தூதரக உறவும் மேம்படவும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பெருக, சிறு மற்றும் குருந் தொழில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்பெறும் மாநாட்டில் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதற்கு நான் வந்துள்ளேன்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை கருத்திற் கொண்டு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது என்று குறிப்பிட்ட அவர், இனிமேலும் இந்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல், உலக தமிழ் வம்சாவளிகளான நாமும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பல திட்டங்களை முன்வைத்துள்ளோம் என உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
மேலும் படிக்க | நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ