சமீபத்தில் நியூயார்க்கை சேர்ந்த ஆடம்பர நகை நிறுவனம் காற்றில் இருந்து வைரங்களை தயார் செய்துள்ளது. ஏதர் என்ற நிறுவனம் இதனை ஆய்வகத்தில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரம் ஏன் சிறப்பு வாய்ந்தது மற்றும் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றில் இருந்து விலைமதிப்பற்ற வைரம்
 
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) உதவியுடன் இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக 'டெய்லிமெயில்' செய்தி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம் என்று உள்ள நிலையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வாயுவின் உதவியுடன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை தயாரிக்க முடியும். தோன்றத்திலும் வேதியல் ரிதியாகவும், சுரங்கம் மூலம் தரையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உண்மையான வைரத்தை போலவே, இந்த வைரம் உள்ளதாக நிறுவனம் கூறுகிறது.


மேலும் படிக்க | போலந்து அகதி முகாமில் இந்தியாவின் ‘மேலை நாட்டு மருமகள்; உக்ரைன் போரினால் ஏற்பட்ட பிரிவு!


புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன்  சாதனை


இந்த வைரம் 4 நிலைகளில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், ஒரு உலையைப் பயன்படுத்தி, கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஹைட்ரோகார்பன் தொகுப்பு செயல்முறை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதைச் செய்வதன் மூலம், கார்பன் டை ஆக்சைடு ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்பட்டது. ஹைட்ரோகார்பன்கள் இரசாயன நீராவியின் உதவியுடன் வைரங்களாக மாற்றப்பட்டன.


வைர படிகங்கள்


ஆய்வகத்தில் ஒரு செயல்முறை மூலம் வைர படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு அது வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பின் அவை பளபளக்கும் வைரங்களாக மாறுகின்றன


காற்று மாசுபாட்டை வைரமாக மாற்ற திட்டம்


இந்த வைரத்தின் விலை குறித்து நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ரியான் ஷீர்மேன் கூறுகையில், "உலகின் முதல் தரமான வைரங்களை காற்றின் மூலம் உருவாக்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். காற்று மாசுபாட்டை வைரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். ரியான் மேலும் கூறுகையில், காற்றில் இருந்து சுமார் 20 டன் கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுப்பதன் மூலம் ஒரு காரட் வைரத்தை தயாரிக்க முடியும் என்றார்.


மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR