புதுடெல்லி: 2023 புத்தாண்டை வரவேற்க இந்தியா காத்திருக்கும் வேளையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளையும், ஃபிஜி, பப்புவா நியூ கினியா போன்ற தீவு நாடுகளையும் கொண்ட ஓசியானியா கண்டம், புத்தாண்டை வரவேற்கும் உலகிலேயே முதல் இடமாகும். கிரிபட்டியில் உள்ள கிரிமதி தீவு 2023 ஆம் ஆண்டைக் கொண்டாடும் முதல் இடமாகும், அங்கு ஜனவரி 1 GMT காலை 10 மணிக்கு தொடங்குகிறது (இந்திய நேரப்படி டிசம்பர் 31 அன்று மாலை 3:30 மணி). இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மக்கள் ஏற்கனவே புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டு 2023 பிறந்ததை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றதுடன், இந்தாண்டு நல்லாண்டாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு பிறந்த நிலையில் வான வேடிக்கைகள் மூலம் நாட்டையே வண்ணமயமாக மாற்றியுள்ளனர். பரஸ்பரம்  மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதன் மூலம் சர்வதேச அளவில் 2022ம் ஆண்டு  நிறைவடைந்து  2023 ஆண்டு பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 2023 ஆம் ஆண்டின் முதல் வாரம் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் 


2022ம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு 2023 புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு களைகட்டும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. ஆனால்,  தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும் கூட  தொற்று பரவல அபாயத்தை  தவிர்க்கும் நோக்கத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஜனவரி 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ