நோ COVID-19 வைரஸ்.. இயல்புநிலைக்கு திரும்பும் நியூசிலாந்து.. மக்கள் மகிழ்ச்சி
சரியான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை காரணமாக் நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் வீழ்த்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வெலிங்டன்: நாட்டின் இறுதி கொரோனா நோயாளி (Corona Patient) குணமடைந்து மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் நியூசிலாந்தில் செயலில் COVID-19 தொற்றால் பாதித்தவர்கள் இல்லை என்று சுகாதார அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
இந்த மைல்கல் "மிகவும் நல்ல செய்தி" மற்றும் நியூசிலாந்து (New Zealand) முழுமையான ஒரு சாதனை அடைய முடியும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கூறினார்.
"பிப்ரவரி 28 க்குப் பிறகு முதன்முறையாக எந்தவொரு கொரோனா வழக்குகளும் இல்லாதது நிச்சயமாக எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியின் அடையாளமாகும். ஆனால் நாங்கள் முன்பு கூறியது போல், COVID-19 க்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வுடேன் செயல்படுவது அவசியம்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Read | டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
கொரோனா தொற்றுநோயைக் கையாண்டதற்காக நியூசிலாந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அங்கு ஏழு வாரங்கள் கடுமையான ஊரடங்கு (New Zealand Lockdown) உத்தரவு இருந்தது. இது கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பின்னர் கடந்த மாதம் ஊரடங்கு முடிவடைந்தது.
ஐந்து மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென் பசிபிக் தேசமான நியூசிலாந்தில் 1,154 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு 22 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
கடந்த 17 நாட்களுகாக புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை. ஒரு வாரத்திற்கும் மேலாக ஒருவருக்கு மட்டும் கொரோனா செயலில் இருந்தது. இந்த இறுதி நோயாளியின் விவரங்கள் தனியுரிமை காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. அந்த நபர் இப்போது தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Read | சீனாவை விட மகாராஷ்டிராவில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு..
நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் (New Zealand Prime Minister Jacinda Ardern), நான்கு அடுக்கு வைரஸ் எச்சரிக்கை நிலையில், மிகக் குறைந்த மதிப்பீட்டான லெவல் 1 நிலை எச்சரிக்க நடவடிக்கை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில்கீழ், சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். ஆனால் இறுதி உள்நாட்டு கட்டுப்பாடுகள் - பொதுக் கூட்டங்கள் மீதான வரம்புகள் மற்றும் கட்டாய சமூக விலகல் போன்றவை அகற்றப்படும்.
சரியான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை காரணமாக் நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் வீழ்த்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டுக்கு மற்றும் அந்த நாட்டின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.