நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் லூ ஜியாபோ சிறையில் மரணம்
சீனாவை சேர்ந்தவர் போராளி லியு ஜியாபோ(வயது61) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சீனாவில் அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தம் செய்து, மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி ‘சார்ட்டர் 08’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூல் அரசுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, சீன அரசால் கைது செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2010-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் நோபல் பரிசு வழங்கும் விழாவுக்கு அவரை அனுப்ப சீனா மறுத்து விட்டது.
இந்நிலையில், லி ஜியாபோவுக்கு புற்றுநோய் தாக்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஒரு மாதமாக சீன மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்தனர். இந்த சூழ்நிலையில், சிகிச்சைப் பலனின்றி லியு ஜியாபோ உயிரிழந்தார்.