அமைதிகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!
அணு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச பிரச்சாரம் (ICAN) அமைதிகான நோபல் பரிசு பெற்றது. உலகெங்கிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டணி ICAN என்ப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல், அமைதி என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச பிரச்சாரம் (ICAN) அமைப்பிற்கு அமைதிகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.