புதுடெல்லி: இயற்பியலுக்கான 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு சியுகுரோ மனாபே (Syukuro Manabe), கிளாஸ் ஹாசல்மேன் (Klaus Hasselmann) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (Giorgio Parisi) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவிலான பங்களிப்பை அளித்ததற்காக இந்த மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.



ALSO READ: 2021 நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் அமெரிக்க அதிபர் Donald Trump!!


ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் ஒப்பிட முடியாத மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான முதல் அறிவிப்பாக, நேற்று, அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு (Nobel Prize) அறிவிக்கப்பட்டது. 


இந்த பரிசு, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு  பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி தலைவர் தாமஸ் பெர்மன் தெரிவித்தார். 


உலக அளவில், மிகவும் உயர்ந்த, மதிப்புமிக்க விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அளிக்கப்படும் விருதுக்கான அறிவிப்பு சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டிலும் அறிவிக்கப்படுகிறது. 


நோபல் பரிசில் என்ன கிடைக்கும்?


நோபல் பரிசு பெறுபவர்களுக்கு, தங்க பதக்கமும், ரூ.8½ கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது. 


ALSO READ: 2020 ஆண்டின் இலக்கியத்திற்கான Nobel பரிசை வென்றார் அமெரிக்க கவிதாயினி லூயிஸ் க்ளூக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR