அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வந்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய அவர் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது, சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஒரு பெரிய அரபு நாட்டிற்கும் இடையிலான முதல் ஒப்பந்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாக்ஸ் நியூசின் படி, அதிபர் டிரம்ப்பின் பெயரை ஒரு நார்வே அரசியல்வாதி - கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே என்பவர் அனுப்பியுள்ளார்.
"மற்ற அமைதி பரிசு வேட்பாளர்களை விட அவர் நாடுகளுக்கு இடையே சமாதானத்தை உருவாக்க அதிக முயற்சி செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்," என்று டைப்ரிங்-ஜெஜெட், ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
ஒரு சில தகவல்களின்படி, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு விருந்தளித்த சிங்கப்பூர் உச்சிமாநாட்டிற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக டைப்ரிங்-கெஜெடே இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Prize) பரிந்துரையை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கிடையில், செப்டம்பர் 8 ம் தேதி அமெரிக்க அதிகாரி ஒருவர் இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் (White House), அமெரிக்கா (America) மத்தியஸ்தம் செய்து ஏதுவாக்கப்பட்ட, தங்கள் உறவுகளை இயல்பாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று கூறினார்.
ALSO READ: COVID-19 தடுப்பூசியை உருவாக்கவும், விநியோகிக்கவும் WHO உடன் சேர மாட்டேன்: US
ஒப்பந்தத்தின் படி, தூதரகங்கள் மற்றும் தூதர்களை பரிமாறிக்கொள்ளவும், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பரந்த துறைகளில் ஒத்துழைப்பைத் தொடங்கவும் நாடுகள் உறுதியளித்துள்ளன.
அக்டோபர் 26, 1994 இல் இஸ்ரேல்-ஜோர்டான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து இஸ்ரேலை அங்கீகரித்த முதல் பெரிய அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆகஸ்ட் 13, 2020 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம், மிகவும் நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் வளமான மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். இந்த ஒப்பந்தம் பாரம்பரிய சிந்தனையை தலைகீழாக மாற்றுகிறது. பிராந்தியத்தின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்ய இது, நடைமுறை விளைவுகளைக் கொண்ட யதார்த்த நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளது. இது புதிய இணைப்புகளின் வாக்குறுதியைக் கொண்டுள்ளது, இது ஏற்கனவே இருக்கும் மோதல்களை குறைப்பதற்கும் எதிர்கால மோதல்களைத் தடுப்பதற்கும் உதவும்.” என்று அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 2020 இல் 318 வேட்பாளர்கள் இருந்தனர்.
ALSO READ: அமெரிக்காவுக்கு போயும் போலி ஓட்டா? வழக்கில் சிக்கிய இந்தியர்!!