ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால், அங்கே பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் அருகே கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா (North Korea) ஏவியுள்ளத என ஜப்பான் பிரதமர் யோஷிஹிடா சுகா வியாழக்கிழமை கூறினார்.


ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், மேலும் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறப்பட்டுள்ளது. 


முன்னதாக, ஜப்பானின் (Japan) பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் வட கொரியாவின் ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடா சுகா  (Yoshihide Suga), செய்தியாளர்களுடன் பேசியபோது, ​​ஒரு வருடத்திற்கு முன்பு இதே போன்று ஏவுகணைகளை வட கொரியா ஏவியதாக குறிப்பிட்டார். இது  நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதோடு ஐ.நா. தீர்மானங்களை மீறிய செயல் எனவும் அவர் கூறினார்.


ALSO READ | அமெரிக்கா தான் எங்கள் முதல் எதிரி.. மிரட்டுகிறார் Kim Jong Un..!!!


தென் கொரியாவின் முக்கிய அதிகாரிகளும் வட கொரியாவின் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜப்பான் கடலில் வட கொரியா  ரகசிய திட்டங்களை தொடங்கியுள்ளதாக அவர்கள் கூறினார். இந்த கடல் கொரியாவில் கிழக்கு கடல் என்றும் அழைக்கப்படுகிறது. 


ஐ.நா. (UN) பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தின் கீழ், பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கக் கூடாது என வடகொரியாவிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் மார்ச் 21 அன்று, இரண்டு ஏவுகணைகளை வட கொரியா ஏவியது. இருப்பினும், இவை பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்ல என்பதால், அது ஐ.நா. தீர்மானத்தை மீறும் செயல் அல்ல  இந்த பிரச்சினைக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 


ஆனால், இதை சர்வதேச சமூகம் முக்கியமாக, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் செயல் என உலக அரசியல் வல்லுநர்கள் பார்க்கின்றனர். 


வட கொரியாவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிடென் நிர்வாகம் விரும்புவதாக தகவல் அனுப்பிய போதும், இது குறித்து வடகொரியா இதுவரை பதிம் ஏதும் அளிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அமெரிக்க அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பதவி ஏற்ற பின்பு வட கொரொயா நடத்தும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | வடகொரியா தனது பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மூலம் அமெரிக்காவை எச்சரிக்கிறதா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR