மர்மங்கள் நிறைந்த தேசமான வடகொரியாவில் நடப்பதெல்லாம் மர்மங்களாகவே இருக்கின்றன. வடகொரியா (North Korea) ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் எதை உண்ன வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அந்நாட்டின் அதிபரே முடிவு செய்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த காலங்களில், உணவு பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதோடு, தங்கள் செல்ல பிராணிகளை இறைச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டது. மேலும், கேற்கத்திய கலாசார பாதிப்பு வந்து விடக் குடாது என்பதற்காக, மக்கள் வெளிநாட்டை சேர்ந்த இசையை கேட்கவும், திரைப்படம் பார்க்கவும் கூட தடை உள்ளது. அது மட்டுமல்ல அங்கே ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தசை உள்ளது . 


அந்த வகையில், இப்போது கிம் ஜாங் உன் பயன்படுத்தும் கழிப்பறை குறித்த செய்திகள் வந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) இறந்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், பின்னர், தனது தாத்தா நினைவேந்தலில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 


ALSO READ | North Korea: பாப் இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொதுவில் பொது மரண தண்டனை..!!


வடகொரிய சர்வாதிகாரி பயணம் மேற்கொள்ளும்  வாகனங்கள் அனைத்திலும் கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளியில் செல்லும் போது,  அங்கிருக்கும் கழிப்பறையை பயன்படுத்தாமல், வாகனத்தில் உள்ள கழிப்பறையை மட்டுமே பயன்படுத்துகிறார் என தென் கொரிய செய்தி நிறுவனமான தி சோசுனில்போ  (The Chosunilbo) கூறியுள்ளது. மேலும், அவரது மாளிகையிலும் சரி வாகனத்திலும் சரி வேறு யாரும் பயன்படுத்தாமல்  இருக்கவும், காவல் போடப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கிம்மின் உடல் நலம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் நிலையில், அவரது மலம் அவரது உடல்நிலை குறித்து நிறைய விஷயங்களை வெளிப்படுத்தக் கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடாவடிக்கை என கூறப்படுகிறது.


தன்னை ஒரு சக்திவாய்ந்த நபராக முன்னிறுத்த அதிபர் கிம் முயன்று வரும் நிலையில், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் அவரது உடல்நலப் பிரச்சினை பற்றிய செய்திகள் வெளிவராமல் இருக்க இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது. 


அது மட்டுமல்ல வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங்-உன், உலக பயணம் மேற்கொள்ளும் போது, அவருக்கென தனிப்பட்ட கழிப்பறை இருந்தது என்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசிய வட கொரிய காவல் படையின் முன்னாள் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.


ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR