வட கொரியாவில் (North Korea) கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும் என்பதை அந்நாட்டின் ஆட்சியாளரே முடிவு செய்கிறார். இப்போது, நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால், மக்கள் எவ்வளவு உண்ண வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு ஜனவரியில் வடகொரியா (North Korea) கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உணவு பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு வாழைப்பழம் வாங்க கூட அங்கே ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
ALSO READ | Kim Jong Un: கொரோனாவே இல்லைன்னா.. தடுப்பூசி எதுக்கு பாஸ்.. சொல்லுங்க..!!
இதை அடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வடகொரியாவில் நிலவும் உணவுப் பற்றாக்குறையை காரணம் காட்டி, 2025-ம் ஆண்டு வரை வடகொரியாவில் மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தொற்றுநோய் தொடக்கத்தில் இருந்து, சீனா உடனான தனது தேசிய எல்லைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பற்றாக்குறைக்கு விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை சரியாக நிறைவேற்றாது தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ALSO READ | 40 ஆண்டு ரகசியம் அம்பலம்; கிம் ஜாங் உன்னின் தந்தை கொரிய நடிகையை கடத்திய காரணம்
நாட்டின் உணவு நிலைமை "மிகவும் மோசமாக உள்ளது" என்றும் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது எனக் கூறி, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறு அதிகாரிகளை கிம் வலியுறுத்தினார் என
இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான, பிடிஐ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது .
ஒரு ஆதாரம் ரேடியோ ஃப்ரீ ஏசியா (RFA) இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவில் உணவு பஞ்சம் 2025 வரை தொடரும் என்று கூறியது.
ALSO READ | தினமும் அழ பயிற்சி செய்யும் மக்கள்; வட கொரியாவும் அதன் வினோதங்களும்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR