புதுடெல்லி: வழக்கமாக கிம் ஜாங் உன் பல நாட்களாக பொது மக்கள் பார்வையில் படவில்லை. அவரை காணவில்லை, அவர் இறந்து விட்டார் போன்று பல விதமான செய்திகள், ஊகங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்த முறை, அவரது ஒன்று விட்ட சகோதரர் மகன் காணவில்லை என்ற செய்தி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், காணாமல் போயுள்ளவரின் தந்தையான கிம் ஜாங் நாம் (Kim Jong-Nam), கிம் ஜாங் உன்னின் (Kim Jong-Un) பதவிக்கு போட்டியாளராக இருந்ததால் மர்மான முறையில் கொல்லப்பட்டார்.


வட கொரிய ( North Korea) சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் மருமகன் கிம் ஹான்-சோல் (Kim Han-sol) காணாமல் போயுள்ளார். அவர் கடைசியாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முகவர்களுடன் காணப்பட்டார் என கூறப்படுகிறது. கிம் ஹான் சோலின் பாதுகாப்பிற்காக, சிஐஏ அவரை தனது பாதுகாப்பு வட்டத்தில் வைத்து பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.


ALSO READ |  வட கொரியாவின் விந்தை அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் காணவில்லை... !!!


கிம் ஹான் சோல் வட கொரிய சர்வாதிகாரி கின் ஜாங் உன்னின் ஒன்று விட்ட சகோதரரான கிம் ஜாங் நாமின் (Kim Jong-Nam) மகன். கிம் ஜாங் நாம் 2017 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். கிம் ஜாங்-உன் தான் அவரை கொல்ல உத்தரவிட்டார் என்று நம்பப்படுகிறது.


கிம் ஹான் சோலுக்கு 25 வயது. சோல் அவர்கள் ஆடமப்ரமான வாழ்க்கையை வாழ்வதோடு, சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். அவர் சரணடைய சிஐஏ முகவர்கள் ஏற்பாடு செய்ததோடு,  அவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ பாதுகாப்பில் அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் ஹான் சோல் தனது கிம் ஹாங்க் உன்னை ஒரு சர்வாதிகாரி  என ஏற்றுக் கொண்டும் கொரியாவில் அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டியில் இருந்து விலகிவிட்டார் என்று நம்பப்படுகிறது.


கிம் ஹான்-சோலின் (Kim Han-sol) தந்தை கிம் ஜாங் நாம் ஒரு காலத்தில் வட கொரியாவின் சிம்மாசனத்திற்கான போட்டியாளராக இருந்தார். அவர் 2001 வரை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-இல் வாரிசு என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்பப்பட்டார். ஆனால் ஜப்பானின் டிஸ்னிலேண்டிற்குச் செல்லும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆம்ஸ்டர்டாமில் நாடுகடத்தப்பட்டார்.


ALSO READ | Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR