தென்கொரியாவில் அமைக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பகைமை நாடான தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடுக்க விரும்பிய வடகொரிய அதிபர் கிம் ஜாங், கடந்த ஆண்டு மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டினார். இதனையடுத்து தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பி வைத்தார். 


தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச ஹாட்லைன் தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டது. 


தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்ய கூட்டுறவு அலுவலகம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 


இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சமீபத்தில் நடத்திய இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்னர் வடகொரியா அதிபரின் மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதனால் இருநாடுகளுக்கும் இடையில் முன்னர் இருந்ததுபோல் தீராத பகை நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.