சியோல்: வட கொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் நேற்று (புதன்கிழமை) சில புகைப்படங்களை வெளியிட்டன. அதில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) ஒரு வெள்ளை நிற குதிரையில் பனி மலையில் அவர் சவாரி செய்வதாக உள்ளது. இந்த மலை அந்நாட்டின் புனித அடையாளமாக கருதப்படுகிறது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமான கே.சி.என்.ஏ (KCNA) எட்டு புகைப்படங்களையும், "அன்புள்ள தலைவர் கிம் ஜாங்-உன் மலையை ஏறியது" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் பனிப்பொழி பெய்யும் சமயத்தில் கிம் ஜாங்-உன் ஒரு வெள்ளை குதிரை மேல் மலையில் சவாரி செய்தார் என தொடங்கும் அறிக்கையில், இந்த சம்பவம் கொரிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு என்று விவரித்துள்ளதுடன், தங்கள் நாட்டு அதிபர் ​​பேக்டு மலையில் வருகை தந்தது, தனது நாட்டை மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்காக, அவர் கடந்து வந்த தனது கடினமான போராட்டத்தை நினைவு கூர்ந்தார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கொரியாவின் தேசிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் அதிகாரிகளுடன் கிம் உடன் இருந்தார். கொரியாவின் அடையாளத்தில் பாகு மவுண்ட் அதன் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் தற்போதை அதிபர் ஜாங்-உன் தந்தையின் பிறப்பிடமாகவும் இது கருதப்படுகிறது. 


எஃப் நியூஸின் அறிக்கையின்படி, கிம் இந்த புகழ்பெற்ற மலைக்கு முந்தைய மூன்று முறை வருகை பிறகு சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதையும், இந்த முறை என்ன முடிவு எடுக்கபோகிறார் என்று அனைவரும் எதிர்நோக்கி இருப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்ட உள்ளனர்.


பேக்டு மலைக்கு கிம்மின் முந்தைய வருகை டிசம்பர் 2017 இல் இருந்தது, அதன்பிறகு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான இராஜதந்திர உறவுகளில் வடகொரியா மாற்றங்களை மேற்கொள்ள முயற்ச்சிகளை மேற்கொண்டது. முன்னாள் அதிபரும் கிம் தந்தையும் கிம் யோங்-இல் இறந்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 2013 இல் கிம் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 2014 நவம்பரில் பேக்டு மலை வருகைக்குப் பிறகு, ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த யாங் சாங்-தேக்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.


இதன் அடிப்படையில் தான், இந்த முறை என்ன முடிவு எடுக்கப்போகிறார்? அல்லது அடுத்தட அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டமாக இதைப் பார்க்கலாமா? அல்லது இந்த பயணத்திற்கு பின்னால் மிகப்பெரிய திட்டம் உள்ளதாக? போன்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் மாதங்களில் இதற்கான விடை கண்டிப்பாக தெரியலாம்.