ஒஸ்லோ: நாட்டில், சட்டம் அனைவருக்கும் பொது தான் என நிரூபித்துள்ளது நார்வே போலீஸ். அங்கே சட்டத்தின் முன் சாதாரண குடிமகனும் நாட்டின் தலைவர்களும் சமம் என அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான விதிகளை மீறியதற்காக நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


நார்வேயில் (Norway) அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகள் தொடர்பாக  நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 1,01,960 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்


நார்வேயில் கடந்த மாதம் தனது 60 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் (PM Erna Solberg) 13 குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து  ஏற்பாடு செய்துள்ளதார். கொரோனா (Corona) வழிகாட்டுதலின்படி 10 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு என்ற நிலையில்  நார்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். இருப்பினும், இதற்கு பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார், ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  


ALSO READ | ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்


விருந்தின் போது சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால்  காவல் துறையினர் பிரதமருக்கு, 20 ஆயிரம் நார்வே கரவுன்ஸ்,  அதாவது சுமார் 1,75,648 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  


ஒரு மலை ரிசார்ட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர், இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். வழக்கமாக, இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் அபராதம் விதிக்க மாட்டார்கள், ஆனால் அரசாங்கத்திற்கு தலைமை தாங்குபவரே விதிகளை மீறயதால், அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் விதிகளை மீறும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு தெளிவான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. 


சட்டம் அனைவருக்கும் சமம் என்றும், விதிகளை மீறும் ஒவ்வொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.


ALSO READ | மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; தூதுவரையும் விட்டு வைக்காத ராணுவம்