மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; தூதுவரையும் விட்டு வைக்காத ராணுவம்

அங்கு  ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அதனை ராணுவம் தொடர்ந்து அடுக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அடக்குமுறையில் அந்நாடு தூதுவரையும் விட்டுவைக்கவில்லை மியானமார் ராணுவம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2021, 10:35 PM IST
  • இங்கிலாந்துக்கான மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் மின் ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
  • ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அதனை ராணுவம் தொடர்ந்து அடுக்குமுறையை பிரயோகித்து வருகிறது.
மியான்மாரில் ராணுவத்தின் வெறியாட்டம்; தூதுவரையும் விட்டு வைக்காத ராணுவம் title=

மியான்மரில் (Myanmar) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.

எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

அங்கு  ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அதனை ராணுவம் தொடர்ந்து அடுக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அடக்குமுறையில் அந்நாடு தூதுவரையும் விட்டுவைக்கவில்லை மியானமார் ராணுவம்.

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரை, மியான்மார ராணுவம் தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கான  மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் மின் ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து மியான்மரின்  ராணுவ அதிகாரிகள் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்தை விட்டு  வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், மேலும் இனி தான் நாட்டின் பிரதிநிதி இல்லை என்றும்கூறியதாக கியாவ் ஸ்வார் மின் தெரிவித்தார்.

மியான்மார் தூதர் கியாவ் ஸ்வார் மின் லண்டனில் உள்ள தூதரக கட்டிடத்திற்கு வெளியே வீதியில் நின்றுக்கொண்டு லண்டன் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ALSO READ | மியான்மாரில் ராணுவத்தின் அடக்குமுறையை மீறி தீவிரமடையும் போராட்டம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News