அதிகரிக்கும் Omicron பீதி: இறப்பு எண்ணிக்கை குறித்து கவலையில் WHO
புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது.
ஜெனீவா: புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது.
"உலகளவில் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று WHO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் (Omicron) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை முழுமையாகப் புரிந்து கொள்ள கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன என்றும் ஐ.நா-வின் சுகாதார அமைப்பான WHO கூறியுள்ளது. கோவிட்-19 மருத்துவத் தரவு தளத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவைச் சேகரித்து பகிர்ந்து கொள்வதில் நாடுகளை ஊக்குவிக்க தயாராக உள்ளதாகவவும் WHO தெரிவித்துள்ளது.
ALSO READ | ஒமிக்ரான்; பிரிட்டனில் முதல் உயிரிழப்பு - பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவிப்பு
புதிய கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானின் அம்சங்களைப் பற்றி உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரம் தெரிவித்தது. இது எந்த அளவுக்கு பரவக்கூடும் என்பது பற்றியும் கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கை பற்றியும் WHO எச்சரித்துள்ளது.
கொரோனாவைரஸ் பெருந்தொற்றின் ஒரு மாறுபாட்டால், இந்த தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கம் ஏற்படும் என ஐ.நா-வின் சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், அது இந்த ஓமிக்ரான் மாறுபாடாகத் தான் இருக்குமா என்பதை தற்போது கிடைத்துள்ள சொற்ப தகவல்களை வைத்து சொல்ல முடியாது.
கடந்த வாரம் WHO டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், "புதிய மாறுபாடு நிலையாக, வேகமாக பரவி வருகிறது’ என்பதை சுட்டிக்காட்டி, மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது சரியான அதிகரிப்பு விகிதத்தை கணக்கிடுவது கடினமாக உள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு (CoronaVirus New Variant Omicron) தொடர்பாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கையை வழங்கியுள்ளனர். ஏப்ரல் இறுதிக்குள், பிரிட்டனில் Omicron காரணமாக இறப்பு எண்ணிக்கை 25,000 முதல் 75,000 வரை இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
ALSO READ | Omicron: பகீர் தகவல்! ‘இந்த’ நாட்டில் ஓமிக்ரானால் 75000 பேர் இறக்கக்கூடும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR