உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கோவிட்-19 இன் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டைப் பற்றி ஆராய்ந்து வரும் நிலையில், டெல்டா மற்றும் பீட்டா மாறுபாடுகளை விட புதிய மாறுபாடு அதிக அளவில் தொற்றை பரப்பக்கூடியதாக உள்ளது என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வியாழன் வெளியிட்ட ஆரம்ப கட்ட ஆய்வில், ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant ), கொடிய டெல்டா போன்ற மற்ற வகைகளை விட மூன்று மடங்கு அதிகமாக மறு நோய்த்தொற்றுகளை (reinfections) ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்க (South Africa) விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சுகாதார அமைப்பால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஓமிக்ரான் தொற்று தாக்குவதற்கு முன்னர், வேறு தொற்றுகள் மூலம் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியை ஓமிக்ரான் மாறுபாடு வென்றுவிடும் என்பதற்கான முதல் தொற்றுநோயியல் ஆதாரம் இந்த கண்டுபிடிப்புகளில் கிடைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்பின் அறிக்கை இன்னும் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆய்வின் படி, நவம்பர் 27 வரை கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட 2.8 மில்லியன் நபர்களில் சுமார் 35,670 பேருக்கு மறுதொற்றுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 90 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டால், அது மறுநோய்த்தொற்றாகக் கருதப்படும்.


ALSO READ:ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! 


"கோவிட்டின் மூன்று அலைகளில் முதன்மை நோய்த்தொற்றுகள் ஏற்பட்ட நபர்களில் சமீபத்திய மறுநோய்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்கள் டெல்டா அலையில் முதல் தொற்றை பெற்றவர்கள்” என்று தென் ஆப்பிரிக்காவின் DSI-NRF மையத்தின் இயக்குநர் ஜூலியட் புல்லியம் ட்வீட் செய்துள்ளார்.


இருப்பினும், தற்போது வரை, வைரஸால் மீண்டும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களின் தடுப்பூசி நிலை குறித்து எந்த தெளிவும் இல்லை. எனவே ஒமிக்ரான் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை எந்த அளவிற்கு கையாள்கிறது என்பதை விஞ்ஞானிகளால் மதிப்பிட முடியவில்லை. இது குறித்து ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானியும் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் நிபுணருமான அன்னே வான் கோட்பெர்க், கோவிட்-19 (COVID-19) வழக்குகள் அதிகரிப்பதை முன்னறிவித்தார். எனினும், கடுமையான விளைவுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ALSO READ:இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR