சாலையில் வெடித்து சிதறிய 50 டன் எடையுள்ள திமிங்கிலம்; எங்கும் ரத்த வெள்ளம்..!!!
உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது.
உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் ( ஜனவரி 26), பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள் உறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர்.
சாலையில் வெடித்து சிதறிய திமிங்கலம்
டெய்லி ஸ்டார் பத்திரிக்கையில், இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் கொண்டு செல்லப்பட்ட திமிங்கலத்தில் உடல் வெடித்து சிதறியதால், பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அலறிக் கொண்டே ஓடினர். சாலையில் எங்கும், ரத்தம், உடல் உறுப்புகள், இறைச்சி ஆகியவை சிதறிக் கிடந்தது. 50 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ALSO READ | Viral Photo: விந்தையான வகையில் பெரிதாகும் பெண்ணின் கர்ப்ப கால வயிறு..!!!
ஒரு திகில் படம் போல் இருந்த காட்சிகள்
தென்மேற்கு தைவானின் பரபரப்பான தெருக்களில் திமிங்கலத்தின் சடலம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது வெடித்தபோது, நகரம் ஒரு திகில் திரைப்படத்தின் காட்சியைப் போன்று, சாலை ஒரு இரத்தக்களரி ஆனது. ஜனவரி 26, 2004 அன்று பயங்கர வெடிப்பு நேர்ந்தது. 50 டன் எடையுள்ள திமிங்கலம் ஒரு பெரிய லாரியின் பின்புறத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வாயு அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்ட என்கின்றனர் வல்லுநர்கள். ஆச்சரியப்படும் விதமாக, இந்த வகை வெடிப்பு என்பது திமிங்கலங்களில் மிகவும் பொதுவான நிகழ்வாகும் என அவர்கள் கூறுகின்றனர், இது பாலூட்டியின் இறந்த உடல் சிதையும் போது, உள்ளே உருவாகும் வாயுக்களின் அழுத்தத்தால், உடல் வெடிக்கிறது என்கின்றனர்.
தைவானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய திமிங்கலம் துவாகும். தைவானில் உள்ள தேசிய செங் குங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங் சியென்-பிங் கூறுகையில், திமிங்கலம் 50 டன் எடையும் 17 மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்தது; தைவானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய திமிங்கலம் இதுவாகும் என்றார்.
ALSO READ | Watch Video: Burj Khalifa உச்சியில் ஒரு பிரம்மிக்க வைக்கும் விளம்பரம்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR